search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Penguins"

    • பறவை காய்ச்சல் காரணமாக பென் குயின்கள் சாகவில்லை என அதிகாரிகள் அறிவிப்பு
    • அதிக அளவிலான எண்ணிக்கையில் இவை இறந்திருப்பது இயல்பானது அல்ல

    செழிப்பான நிலப்பரப்பையும், நீண்ட அழகான கடற்கரை பகுதியையும் கொண்ட தென் அமெரிக்க நாடு உருகுவே. இங்குள்ள கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 2000 பென்குயின் பறவைகள் இறந்திருக்கிறது.

    பென்குயின்கள் இறப்புக்கு காய்ச்சல் நோய் காரணம் இல்லை என்றும், இந்நிகழ்வின் காரணம் மர்மமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மகெல்லனிக் பெங்குவின்கள் தெற்கு அர்ஜென்டினாவில் இனப்பெருக்கம் மேற்கொள்கின்றன. குளிர்காலத்தில், உணவு மற்றும் வெப்பமான நீரை தேடி அவை வடக்கே இடம் பெயர்ந்து, பிரேசில் நாட்டின் மாநிலமான எஸ்பிரிடோ சாண்டோ நகர கடற்கரையை அடைகின்றன.

    "தற்போது அட்லாண்டிக் பெருங்கடலில் இறந்திருக்கும் இந்த பறவையினங்கள் பெரும்பாலும் மிக இளம் வயது கொண்டவை. அவை உருகுவே நாட்டின் கரையோரங்களுக்கு நீரோட்டங்களால் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இது தண்ணீரிலேயே ஏற்பட்டிருக்கும் இறப்பாகும்.

    அவற்றின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளின் மூலம் இறப்புக்கு காரணம் பறவை காய்ச்சல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு சில பறவைகள் இறப்பது இயல்பானது. ஆனால் இவ்வளவு அதிக அளவிலான எண்ணிக்கையில் இவை இறந்திருப்பது இயல்பானது அல்ல. கடந்த ஆண்டு பிரேசிலில் இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்து என சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விலங்கினங்கள் துறையின் தலைவர் கார்மென் லெய்சகோயன் கூறினார்.

    அட்லாண்டிக் கடற்கரையின் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு, 500-க்கும் மேற்பட்ட பென்குயின்கள் இறந்து கிடந்தன என லகுனா டி ரோச்சா எனப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதியின் இயக்குனர் ஹெக்டர் கேமரிஸ் தெரிவித்தார்.

    அதிகப்படியான மீன்பிடித்தலும், சட்டவிரோத மீன்பிடித்தலுமே இந்த உயிரினங்களின் இறப்பு அதிகரிப்பதற்கு காரணம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    அட்லாண்டிக் கடலில் ஒரு துணை வெப்பமண்டல சூறாவளி, ஜூலை மாத நடுப்பகுதியில் தென்கிழக்கு பிரேசிலை தாக்கியது. இதனால் ஏற்பட்ட மோசமான வானிலையால் பலவீனமான உயிரினங்கள் இறந்திருக்க கூடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×