search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diabetic Dermopathy"

    • அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு ஏற்படும்.
    • செல்கள் கிளர்வூட்டப்பட்டு தோல் கருமை ஏற்படுகிறது.

    உங்கள் உடம்பு கருத்து போவதற்கு காரணம் அகாந்தோசிஸ் நைக்ரிகன்ஸ்' எனப்படும் நோயாகும். இந்நோயில், ஒரு சில நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக முகம், நெற்றி, கழுத்து, முழங்கை, இடுப்பு, அக்குள், உடல் மடிப்புகள், முட்டி போன்ற இடங்களில் கருமையான தடிமனான தன்மையுடையதாக தோல் மாறும். இது பெரும்பாலும் 40 வயதை கடந்த டைப் 2 நீரிழிவு நோயாளிகள் மற்றும் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு ஏற்படும்.

    இது ஏற்படக் காரணம் ஒரு சில நீரிழிவு நோயாளிகளிடம் காணப்படும் இன்சுலின் எதிர்மறை நிலையால், இன்சுலின் அளவு மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகள் அதிகரிப்பதால், கெரட்டினோசைட் மற்றும் பைபிரோபிலாஸ்ட் போன்ற செல்கள் கிளர்வூட்டப்பட்டு இது போன்ற தோல் கருமை ஏற்படுகிறது.

     சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் கருமையாவதற்கு மற்றொரு காரணம் 'டயாபட்டிக் டெர்மோபதி ஆகும். இது பெரும்பாலும் கால்கள் மற்றும் பாதங்களில் குறைந்த குருதியோட்டத்தால் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக தோல் நோய் மருத்துவரை கலந்தாலோசித்து தோலில் கருமை நிறம் ஆவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று கண்டறியப்பட வேண்டும்.

    ஏனெனில் ஹைப்போதைராய்டிசம், அக்ரோமெகாலி, குஷ்ஷிங் சிண்ட்ரோம் போன்ற நோய்களாலும் தோலில் கருமை நிறம் ஏற்படலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருத்தல் மற்றும் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகள்' மற்றும் மேல் பூச்சு களிம்பு மூலமாக இந்தக் கருமை நிறத்தை நாம் சரி செய்யலாம்.

    ×