search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Provision"

    • நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களான 11, 12, 13-ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு பாதுகாப்பு பணியை அதிகப்படுத்த உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்
    • நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களான 11, 12, 13-ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு பாதுகாப்பு பணியை அதிகப்படுத்த உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டம் முழுவதும் பகல் மற்றும் இரவு ரோந்து மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து செல்ல போலீசார் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க குற்றத்தடுப்பு போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதன்படி நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார். என்றார்.

    • சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • சேலம் கோட்டாட்சியர் அம்பாயிர நாதன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கார்மே கம் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற் கான முகாம் வாழப்பாடி அருகே உள்ள அத்த னுார்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் நடை பெற்றது. முகாமிற்கு சேலம் கோட்டாட்சியர் அம்பாயிர நாதன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கார்மே கம் தலைமை வகித்தார்.

    முகாமை முன்னிட்டு துணை கலெக்டர்கள் உள்ளிட்ட மாவட்ட உயரதி காரிகள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்திடவும், அந்தந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, பொதுமக்களிடம் கேட்டறிந்து அறிக்கை சமர்பிக்கவும் உத்தர விட்டார். இதனையடுத்து மக்களை சந்தித்து, குறைகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து அறிக்கை தயார் செய்த குழுவினர்,

    அந்தந்த பகுதிக்கு தேவை யான அடிப்படை வசதிகள் மற்றும் திட்டங் களை செய்து கொடுக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டு மென அரசுத்துறை அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.

    இதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பல்வேறு துறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளி களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, அரசின் மக்கள் நலத்

    திட்டங்கள் குறித்த குடில் களை பார்வையிட்டார்.

    முன்னதாக, அத்த னுார்பட்டி கூட்டுறவு கடன் சங்கம், பொது வின்யோக் ககடை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வற்றை ஆய்வு மேற்கொண்ட தோடு, அத்தனுார்பட்டி புதுார் கிராம மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, ஆதிதிரா விடர் நலத்துறை, வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை, மகளிர் திட்டம், தோட்டக் கலைத்துறை உள்ளிட்ட பல்வேறுத் துறைகளின் மூலம் 70 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    முகாமில், மாவட்ட வரு வாய் அலுவலர் மேனகா, சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிர நாதன், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கூட்டு றவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ரவிக்குமார், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணி கள்) ஜெமினி, வாழப்பாடி தாசில்தார் கோபால கிருஷ்ணன், அட்மாக்குழு தலைவர் சக்கரவர்த்தி, அத்தனூர்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பாரதி ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    பேருந்து நிறுத்தம் கேட்டு மனு

    தொடர்ந்து கலெக்டர் கார்மேகத்தை பா.ம.க. பிரமுகர் சத்தியராஜ், மருத்துவர் பிரேம்குமார் உள்பட பொதுமக்கள், மாணவ–மாணவியர் சந்தித்து புளிந்தோப்பு பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். சம்மந்தப்பட்ட துறை அதி காரிகளுடன் கலந்தாய்வு செய்து, சாத்தியமும், தேவையும் இருப்பின் பேருந்து நிறுத்தம் அமைத்து கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அபிவிருத்தி திட்ட மேம்பாட்டுக்கு நிதி வழங்கல் நிகழ்ச்சி நடந்தது.
    • நிர்வாக மேலாளர் சரவணன்,துணை மேலாளர்கள் ஈஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடலோர சதுப்பு நில காடுகளின் அபிவிருத்தி திட்ட மேம்பாட்டிற்காக ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தை மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் வழங்கினார். இது குறித்து மாவட்ட வன அலுவலர் கூறுகையில், தனியார் நிறுவனங்கள் நீர்வள ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் திட்ட பணிகளை மேற்கொள்ள தங்கள் நிறுவனத்தில் இருந்து பெறக்கூடிய லாபத்தில் அதாவது சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு திட்டம் (சி.எஸ்.ஆர்.) மூலம் 2 சதவீதம் நிதி உதவி வழங்குவது வழக்கம். அந்த அடிப்படையில் கடற்கரை ஓரமுள்ள வனப்பகுதிகளை பாதுகாப்பதற்கான பணிகளுக்கு ரூ.50 லட்சத்தை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் வழங்கி உள்ளனர் என்றார்.

    இதில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத் தலைவர் எஸ்.ராமலிங்கம், உதவி தலைவர் மணிகண்டன், நிர்வாக மேலாளர் சரவணன்,துணை மேலாளர்கள் ஈஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • பரமத்திவேலூர் அருகே உள்ள இருக்கூர், செஞ்சு டையாம்பாளையம், ரங்கநாதபுரம், வெள்ளா ளபாளையம் மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள், கன்றுகள், மயில்கள் மற்றும் நாய்களை சிறுத்தைப் புலி தாக்கி கொன்றது.
    • வனத்துறை யினர் சார்பில் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதன்படி, ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.5 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள இருக்கூர், செஞ்சு டையாம்பாளையம், ரங்கநாதபுரம், வெள்ளா ளபாளையம் மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள், கன்றுகள், மயில்கள் மற்றும் நாய்களை சிறுத்தைப் புலி தாக்கி கொன்றது.

    இந்த சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வனவர்கள், மோப்ப நாய், ட்ரோன் கேமரா, கூண்டுகள், மயக்க மருந்து செலுத்தும் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் இதுவரை சிறுத்தை புலியை கண்டு பிடிக்க முடியாத நிலையில், தற்போது சிறுத்தைப்புலி வந்து செல்லும் வழித்தடம் கண்டறியப்பட்டு 15-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள், 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சிறுத்தை புலி தாக்கி பலியான கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தி ருந்தனர். இதையடுத்து, வனத்துறை யினர் சார்பில் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதன்படி, ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.5 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் பிரவின்குமார் வழங்கினார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது
    • நிறுவனர் சபரிமலைநாதன்,சமூக ஆர்வலர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் முத்தமிழ் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. காக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் செந்தில்குமாரின் தாயார் புற்று நோயால் காலமானார். அவரது 60-வது நினைவு நாளை முன்னிட்டு இந்த அறக்கட்டளை மூலம் முதுகுளத்தூரில்

    30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன்,சமூக ஆர்வலர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது.
    • நடமாடும் நவீன தள்ளுவண்டிகளை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் வழங்கினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் காய்கறி, பூ, பழங்கள், இளநீர், டீக்கடை போன்றவற்றை சுமார் 30-க்கும் மேற்பட்டோர் சாலையோரத்தில் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களை நகராட்சி நிர்வாகம் கொரோனா கால கட்டத்தில் ஆய்வு செய்தனர். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    இவர்கள் வியாபாரத்தை சிரமமில்லாமல் செய்ய தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகர் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.24 லட்சம் மதிப்பிலான நடமாடும் நவீன தள்ளுவண்டிகளை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் வழங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் சாந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • இளையான்குடி அருகே ரூ.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அ.நெடுங்குளத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.30.92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 194 பயனாளிகளுக்கு வழங்கி னார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து அதில் உள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்க மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காமாட்சி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத்துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத்துறை, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு கார் டிரைவிங் கற்று கொடுக்கப்பட்டது.
    • 140-க்கும் மேற்பட்டோருக்கு லைசென்ஸ் வழங்கும் விழா நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மத்திய அரசின் ஸ்வாபிமான் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி கொடுக்கப்பட்டது.

    அந்தத் திட்டத்தின் கீழ் தஞ்சை டி.பி.ஸ்கில்ஸ் மையத்தில் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு கார் டிரைவிங் கற்று கொடுக்கப்பட்டது. 45 நாட்கள் இந்த இலவச பயிற்சி நடைபெற்றது. முடிவில் 140-க்கும் மேற்பட்டோருக்கு இன்று சான்றிதழ், லைசென்ஸ் வழங்கும் விழா தஞ்சையில் நடைபெற்றது.

    இதற்கு மகேந்திரா பைனான்ஸ் டிவிஷன் மேலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற திருச்சி சி.இ.ஓ. சுவாமிநாதன், லயன்ஸ் கிளப் மாவட்ட இரண்டாம் நிலை துணை ஆளுநர் சவரிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ், லைசன்ஸ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் டி.பி.ஸ்கில்ஸ் புராஜெக்ட் மேலாளர் ஜெய்சிங், டி.பி.ஸ்கில்ஸ் ஸ்ரீதர் , பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சை டி.பி.ஸ்கில்ஸ் சென்டர் தலைவர் ஆறுமுகம் செய்திருந்தார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் உணவு வழங்கப்படுகிறது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு வழங்கப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் ஜீவக்கல் ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பேரவையின் மாநில துணைச் செயலாளர் பரலோகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் புனிதன், நகர துணை செயலாளர் அறிவுமிக்கேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்வில் 150-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.

    ×