search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vendors"

    • ஆவின் ஐஸ்கிரீம் விநியோகம் செய்ய விற்பனையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
    • விவரங்களுக்கு 98942 04423, 78459 59109, 96291 78789 என்ற ஆவின் அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் ஆவின் அலுவலக பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை விநியோகம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் முழு விவரங்கள் அறிய ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்ட ஆவின் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் பெற கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு 98942 04423, 78459 59109, 96291 78789 என்ற ஆவின் அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தட்டாஞ்சாவடி தொகுதி பொய்யாகுளம் பகுதியில் நடந்தது.
    • நிதி உதவி பெற்று தரக் கோரியும் வேண்டுகோள் விடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் பஸ்தி சம்பர்க் அபியான் நிகழ்ச்சி தட்டாஞ்சாவடி தொகுதி பொய்யாகுளம் பகுதியில் நடந்தது.

    இந்நிகழ்ச்சியின் போது அப்பகுதி மக்கள் தாங்கள் செய்து வரும் வியாபாரத்திற்கு போதிய நிதி உதவி இன்றி சிரமப்படுவதாகவும், வியாபார அபிவிருத்திக்கு நிதி உதவி பெற்று தரக் கோரியும் வேண்டுகோள் விடுத்தனர் .

    இதனைத் தொடர்ந்து பட்டியல் அணியின் தீவிர முயற்சியில், தெருவோர வியாபாரிகள் 25 நபருக்கு பிரதமரின் ஸ்சுவநிதி திட்டத்தின் கீழ் வங்கி மூலம் நபர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பெற்றுத் தரப்பட்டது.

    அதற்கான வங்கியின் அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்ச்சி பா.ஜனதா கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பயனாளிகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெங்கடேசன் எம்.எல்.ஏ. மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் , விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன், அலுவலக பொறுப்பாளர் மகேஷ், சிவபெருமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது.
    • நடமாடும் நவீன தள்ளுவண்டிகளை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் வழங்கினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் காய்கறி, பூ, பழங்கள், இளநீர், டீக்கடை போன்றவற்றை சுமார் 30-க்கும் மேற்பட்டோர் சாலையோரத்தில் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களை நகராட்சி நிர்வாகம் கொரோனா கால கட்டத்தில் ஆய்வு செய்தனர். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    இவர்கள் வியாபாரத்தை சிரமமில்லாமல் செய்ய தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகர் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.24 லட்சம் மதிப்பிலான நடமாடும் நவீன தள்ளுவண்டிகளை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் வழங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் சாந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • ஆயுத பூஜையை முன்னிட்டு பல்லடம் மார்க்கெட் முன்புறம் நடைபாதை வியாபாரிகள் தள்ளு வண்டியில் வியாபாரம் செய்தனர்.
    • நகராட்சி அதிகாரிகள் கடைகளை போடக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    ஆயுத பூஜையை முன்னிட்டு பல்லடம் மார்க்கெட் முன்புறம் நடைபாதை வியாபாரிகள் தள்ளு வண்டியில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்த நிலையில் திடீரென பல்லடம் நகராட்சி அதிகாரிகள் கடைகளை போடக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,மேலும் நடைபாதை வியாபாரிகள் பயன்படுத்தக்கூடிய தள்ளுவண்டியை நகராட்சி ஊழியர்களை பயன்படுத்தி நகராட்சி வாகனத்தில் கொண்டு செல்ல முற்படும்போது சாலை ஓர நடைபாதை வியாபாரிகளுக்கும் பல்லடம் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முக்கியமான பண்டிகை காலங்களில் கடைகளை போடக்கூடாது என தெரிவிப்பதற்கு நூற்றுக்கு மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனை கண்டித்து பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடைபாதை வியாபாரிகளுடன், நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர், இதன் காரணமாக மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பல்லடம் நகர நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல்லடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.
    • ரூ.84.44 லட்சம் மதிப்பீட்டில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் 98 இலவச தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. காய்கறி கடை 15 வண்டிகள், உணவுக்கடைகள் 40, பூக்கடைகள்20, மற்றவைகள் 23 என மொத்தம் 98 இலவச தள்ளுவண்டிகள் ரூ.84.44 லட்சம் மதிப்பீட்டில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் வழங்கினார்.

    நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு அலுவலர் திலகவதி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், சண்முகராஜன், துபாய்காந்தி, விஜயகுமார், கார்த்திகேயன், ராமதாஸ், மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • தெருவில் சுற்றி திரியும் நாய்கள் மாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • வர்த்தக சங்க நிர்வாகிகள் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் குப்பை மேலாண்மை தெருவில் சுற்றி திரியும் நாய்கள் மாடுகளை கட்ப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார்.

    நகராட்சி ஆணையர் ராஜகோபாலன், மேலாளர் காதர் கான், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, வருவாய் ஆய்வாளர் சார்லஸ் முன்னிலை வகித்தனர். கணக்கர் ராஜ கணேஷ் வரவேற்றார்

    சீர்காழி நகர வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் வர்த்தக சங்க செயலாளர் துரைராஜ் பொருளாளர் ஹரக்சந்த் நிர்வாகிகள் புக்ராஜ் ராஜ்குமார் சந்துரு வினோத் ஜெர்ரிஅகஸ்டின்தாஸ் முரளி மற்றும் சீர்காழி தாலுக்கா மொபைல் விற்ப்பனையாளர்கள் மற்றும் பழுது நீக்குவோர் சங்க தலைவர் மார்க்ஸ்பிரியன் மற்றும் வர்த்தகசங்க நிர்வாகிகள்கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மனு அனுப்பியுள்ளனர்.
    • 4 மாத காலமாக திருப்பூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மனு அனுப்பியுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் சங்கத்தினர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:- முத்திரைத்தாள் சங்கத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு போதிய அளவு முத்திரைத்தாள் விற்பனைக்கு கிடைப்பதில்லை. தமிழகம் முழுவதும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்நிலையில் உள்ளனர். கடந்த 4 மாத காலமாக திருப்பூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை. மாவட்டத்தில் 160 முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் உள்ளனர். இவை கிடைக்க பெறாத சூழ்நிலையில் இ-ஸ்டாம்ப் மூலம் தொகை செலுத்தி ஆவணத்தை பதிவு செய்து கொள்ள மக்கள் அலுவலகம் செல்கின்றனர்.

    ஆனால் இ-ஸ்டாம்பையும் பயன்படுத்தாமல் முத்திரைத்தாள்களுக்கு உண்டான தொகையை காசோலையாக செலுத்தி பத்திரத்தை பதிவு செய்கின்றனர். எனவே போதிய அளவு முத்திரைத்தாள் கிடைக்க பெற வேண்டியும் இ-ஸ்டாம்ப் மூலம் கட்டாயம் பணத்தை செலுத்தி ஆவணங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஒரு வார காலமாக சாலையோரம் கடை அமைக்க தடை விதிக்கப்பட்டது .
    • கடை அமைப்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு அருகாமையில் சாலையோரங்களில் வியாபாரிகள் கடை அமைத்து காய்கறிகள் விற்பனை செய்து வந்தனர்.

    இந்தநிலையில் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஒரு வார காலமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரம் கடை அமைக்க தடை விதிக்கப்பட்டது . மேலும் கடை அமைப்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே சாலையோரங்களில் உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் அப்பால் வியாபாரம் செய்து வந்ததைப் போல தற்போதும் அனுமதி வழங்கிட வேண்டும் , காலை 4 மணி முதல் 8 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ,டி,யு. சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • சாலையோர வியாபாரிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறி வண்டி, ஏழு உணவு வகை வண்டிகள் வழங்க பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
    • நகராட்சிக்கு முன்புள்ள உப்பு குளம் தூர்வாரும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் துணைத் தலைவர் மங்களநாயகி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், சுகாதார ஆய்வாளர்ராமையன் உள்ளிட்ட நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நகராட்சி பகுதியில் தீsன்தயாள் அந்தியோதயா போஜனா தேசிய நகர்ப்புற வாழ்வாதார முகமை நகர்ப்புற திட்ட த்தில் 31 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் பழங்கள் மற்றும் காய்கறி வண்டி, ஏழு உணவு வகை வண்டிகள், 14 பூ விற்பனை வண்டிகள் வழங்க பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

    கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 45 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சிக்கு எதிரே அமைந்துள்ள உப்பு குளம் நீர்நிலை மேம்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

    பின்பு நகரமன்ற தலைவர் புகழேந்தி ்நகராட்சிக்கு முன்பு உள்ள உப்பு குளம் தூர்வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணியில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றும், சாலையோர வியாபாரிகள் 31 பேருக்கு விரைவில் வண்டிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    வத்தலக்குண்டு பகுதியில் ரசாயனக்கல் பீதியால் மாங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இவை அனைத்தும் செழித்து வளர்ந்து நல்ல விளைச்சல் கண்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மாங்காய்களை மதுரை சாலையில் உள்ள கமிசன் கடையில் விற்பனை செய்வது வழக்கம்.

    பொதுவாக மாங்காய்கள் பழுத்து மாம்பழங்களாக ஒருவாரம் காத்திருக்க வேண்டும். ஆனால் விரைவில் பழுக்க வைக்க சில வியாபாரிகள் ரசாயனகல் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் மாங்காய்கள் ரசாயனகல்லில் உள்ள வீரியத்தால் ஒரேநாளில் பழுத்து விடுகிறது. ஆனால் இதனை சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு வயிற்றுவலி உள்ளிட்ட உடல்உபாதைகள் ஏற்படுகிறது.

    மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே மாம்பழம் சாப்பிடுவதை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர்.

    இதனால் 10 முதல் 15 மாம்பழ பெட்டிகள் கொள்முதல் செய்த வியாபாரிகள் ஒரு பெட்டி வாங்குகின்றனர். மேலும் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்பட்ட மாம்பழங்கள் தற்போது ரூ.10க்கு விற்பனையாகிறது. எனவே விவசாயிகள் மாம்பழங்களை என்ன செய்வது என தெரியாமல் சாலையோரங்களில் வீசிச்செல்கின்றனர்.

    மழை இல்லை என்றால் வறட்சியால் பாதிப்பு. ரசாயனகல் பீதியால் நல்ல விளைச்சல் இருந்தபோதும் போதிய அளவு விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

    ×