சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள்

சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.ரூ.84.44 லட்சம் மதிப்பீட்டில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் வழங்கினார்.
சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள்
Published on

சிவகங்கை

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் 98 இலவச தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. காய்கறி கடை 15 வண்டிகள், உணவுக்கடைகள் 40, பூக்கடைகள்20, மற்றவைகள் 23 என மொத்தம் 98 இலவச தள்ளுவண்டிகள் ரூ.84.44 லட்சம் மதிப்பீட்டில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் வழங்கினார்.

நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு அலுவலர் திலகவதி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், சண்முகராஜன், துபாய்காந்தி, விஜயகுமார், கார்த்திகேயன், ராமதாஸ், மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com