திருப்பூரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஒரு வார காலமாக சாலையோரம் கடை அமைக்க தடை விதிக்கப்பட்டது . கடை அமைப்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
 ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கைள படத்தில் காணலாம்.
 ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கைள படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு அருகாமையில் சாலையோரங்களில் வியாபாரிகள் கடை அமைத்து காய்கறிகள் விற்பனை செய்து வந்தனர்.

இந்தநிலையில் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஒரு வார காலமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரம் கடை அமைக்க தடை விதிக்கப்பட்டது . மேலும் கடை அமைப்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே சாலையோரங்களில் உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் அப்பால் வியாபாரம் செய்து வந்ததைப் போல தற்போதும் அனுமதி வழங்கிட வேண்டும் , காலை 4 மணி முதல் 8 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ,டி,யு. சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com