மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் உணவு வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் உணவு வழங்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு வழங்கப்படுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் உணவு வழங்கல்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் ஜீவக்கல் ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பேரவையின் மாநில துணைச் செயலாளர் பரலோகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் புனிதன், நகர துணை செயலாளர் அறிவுமிக்கேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் 150-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com