என் மலர்
நீங்கள் தேடியது " Chief Justice"
- அவர்களுக்கு நெமலின் மயோபதி என்ற ஒரு குறைபாடு உள்ளது.
- இது எலும்பு தசைகளைப் பாதிக்கும் மிகவும் அரிதான மரபணு கோளாறு.
உச்சநீதிமன்றத்தின் தலைமைநீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட் தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதாவது, "நாங்கள் எங்கள் சாமான்களை பேக் செய்துவிட்டோம். அதில் சில ஏற்கனவே புதிய வீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன. சில இங்கே ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டுள்ளன" என்று சந்திரசூட் கூறினார்.
குடியிருப்பில் நீண்ட காலம் தங்கியதற்கான காரணங்களையும் அவர் விளக்கினார். சக்கர நாற்காலிக்கு ஏற்ற வீடு தேவைப்படும் தனது மகள்களின் உடல்நிலையையும் அவர் குறிப்பிட்டார்.
அதாவது, "நான் குறிப்பிட விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், நாங்கள் இரண்டு குழந்தைகளின் பெற்றோர். பிரியங்கா மற்றும் மஹி. அவர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகள். அவர்களுக்கு சிறப்புத் தேவைகள் உள்ளன. அவர்களுக்கு நெமலின் மயோபதி என்ற ஒரு குறைபாடு உள்ளது. இது எலும்பு தசைகளைப் பாதிக்கும் மிகவும் அரிதான மரபணு கோளாறு.
எனவே வீட்டில் கூட, நாங்கள் அதிக சுகாதாரத்தைப் பராமரிக்கிறோம். அவர்களைக் கவனித்துக் கொள்ள எங்களிடம் மிகவும் திறமையான செவிலியர் உள்ளனர். வீட்டு வேலைகளைத் தொடரத் தயாராக இருப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னவுடன், நாங்கள் இடம் பெயர்வோம். இந்தக் காரணங்களுக்காக, இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். அதிகபட்சம் இரண்டு வாரங்கள் இருக்கலாம்" என்று தெரிவித்தார்.
ஜனவரி 2021 மற்றும் 2022 இல், தனது மூத்த மகள் பிரியங்கா சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் 44 நாட்கள் ஐசியுவில் சிகிச்சை பெற்றதையும் சந்திரசூட் நினைவு கூர்ந்தார். பிரியங்கா மற்றும் மஹி சந்திரசூட் உடைய வளர்ப்பு மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.
- சந்திரசூட் தான் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் வசித்த அரசு பங்களாவில் தான் தற்போது வசித்து வருகிறார்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தான் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் வசித்த அரசு பங்களாவில் தான் தற்போது வசித்து வருகிறார்.
இந்நிலையில், சந்திரசூட் அவர் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.
- பி.ஆர்.கவாய் அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி பேசி வருகிறார்.
கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றத்தில் இருந்து அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி பேசி வருகிறார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறையை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். அமல்படுத்தியுள்ளார்
பதிவாளர், சீனியர் தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களில் பட்டியலின பிரிவினருக்கு 15%, பழங்குடியினர் பிரிவினருக்கு 7.5% பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பொறுப்பேற்றார்.
- அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி பி.ஆர். கவாய் பேசி வருகிறார்.
கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றத்தில் இருந்து அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி பேசி வருகிறார்.
இந்நிலையில், நான் ஓய்வுக்குப்பின் ஒருபோதும் அரசுப்பதவிகளை ஏற்க மாட்டேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வட்டமேசை விவாதத்தில் பேசிய பி.ஆர்.கவாய், "நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன் அரசுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது, தேர்தலில் போட்டியிடுவது போன்ற செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது. நான் ஓய்வுக்குப்பின் ஒருபோதும் அரசுப்பதவிகளை ஏற்க மாட்டேன் என உறுதி எடுத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
- மே 26, 2025 அன்று கூட்டம் நடைபெற்றது.
- தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சுஜோய் பால், கல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய முன்மொழிந்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் 21 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் நீதிபதி M.M.ஸ்ரீவஸ்தவாவை நியமிக்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சுஜோய் பால், கல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வி. காமேஸ்வர் ராவ், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கும் மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
மே 26, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தின் போது இறுதி செய்யப்பட்ட இந்தப் பரிந்துரைகள், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதையும், உயர் நீதிமன்றத் தலைவர்களிடையே நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
- மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்தது.
- உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி14 கேள்விகளை எழுப்பினார்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி மசோதாக்கள் மீது முடிவெடுக்க உச்சநீதிமன்றம் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்தது.
இதனால் கொந்தளித்த துணை ஜனாதிபதி தன்கர் உச்சநீதிமன்றம் சூப்பர் பாராளுமன்றம் போல செயல்படுகிறது என்றும் நீதித்துறை அதன் வரம்புக்குள் தான் இருக்க வேண்டும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "அரசியலமைப்பு மட்டுமே உயர்ந்தது என்றும், பாராளுமன்றம் அல்லது நிர்வாகக் குழு தங்கள் கடமைகளைச் செய்யத் தவறும் போதெல்லாம் நீதித்துறை தலையிடும்" என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து, ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு விதித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி14 கேள்விகளை எழுப்பினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பி.ஆர். கவாய் மீண்டும் பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் பேசிய பி.ஆர். கவாய், "நீதித்துறையோ, அரசாங்கமோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல. இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது. 3 தூண்களும் அரசமைப்பின்படி நடக்க வேண்டியவை. அரசியலமைப்பைத் திருத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது, ஆனால் பாராளுமன்றம் அடிப்படை அரசியலமைப்பு கட்டமைப்பைத் மாற்ற முடியாது என்று அவர் கூறினார்.
- உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பொறுப்பேற்றார்
- பி.ஆர்.கவாய் புத்த மதத்தை பின்பற்றுபவர்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் நேற்றோடு நிறைவு பெற்றது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய்க்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். வரும் நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் அவர் இந்த பதவியில் தொடர்வார்.
இதன்மூலம் உச்சநீதிமன்றத்தில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த 2 ஆவது தலைமை நீதிபதி என்ற பெருமையை பி.ஆர்.கவாய் பெற்றுள்ளார். பி.ஆர்.கவாய் புத்த மதத்தை பின்பற்றுபவர்
2007 முதல் 2010 வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, இந்தியாவின் இரண்டாவது தலித் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பொறுப்பேற்றுள்ளார்.
பி.ஆர்.கவாய் 1960ஆம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிறந்தவர். 1985 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.
2003 ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்பு 2005 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்பு 2019-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் நேற்றோடு நிறைவு பெற்றது.
- நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் பி.ஆர்.கவாய் இந்த பதவியில் தொடர்வார்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் நேற்றோடு நிறைவு பெற்றது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாயை (B.R. காவாய்) நியமிக்க சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் நியமனத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பொறுப்பேற்கிறார். வரும் நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் அவர் இந்த பதவியில் தொடர்வார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த கவாய், பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட அமர்வில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசியலமைப்பின் நான்கு மூலைகளுக்குள் செயல்பட வேண்டும்.
- ஆளும் கட்சி நீதித்துறையை பலவீனப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட வழியாக விளக்க முடியாது
இந்தியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய தலைமை நீதிபதி பிஆர் கவாய், அரசியலமைப்பு மட்டுமே உயர்ந்தது என்றும், பாராளுமன்றம் அல்லது நிர்வாகக் குழு தங்கள் கடமைகளைச் செய்யத் தவறும் போதெல்லாம் நீதித்துறை தலையிடும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி மசோதாக்கள் மீது முடிவெடுக்க உச்சநீதிமன்றம் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்தது.
இதனால் கொந்தளித்த துணை ஜனாதிபதி தன்கர் உச்சநீதிமன்றம் சூப்பர் பாராளுமன்றம் போல செயல்படுகிறது என்றும் நீதித்துறை அதன் வரம்புக்குள் தான் இருக்க வேண்டும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார்.
பாராளுமன்றம் எடுத்த கொள்கை முடிவுகளை முறியடிக்க உச்ச நீதிமன்றம் சிர்பூ அதிகாரம் வழங்கும் பிரிவு 141 ஐ ஒரு 'ஏவுகணை'யாகப் பயன்படுத்துகிறது என்றும் விமர்சித்தார்.
இந்நிலையில் இன்றுமுதல் உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்கும் பி.ஆர் கவாய் தி டெலிகிராஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தன்கர் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசினார்.
அவர் கூறியதாவது, பாராளுமன்றம் மிக உயர்ந்தது என்று சொல்வது நல்ல கூற்று அல்ல. இறுதியில், அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது. நீதித்துறை, பாராளுமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகிய ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசியலமைப்பின் நான்கு மூலைகளுக்குள் செயல்பட வேண்டும். பாராளுமன்றம் செயல்படாதபோது அல்லது நிர்வாகம் தனது கடமைகளைச் செய்யாதபோது மட்டுமே நீதித்துறை அதில் தலையிடும் என்று தெரிவித்தார்.
மேலும், தன்கர் மற்றும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ஆகியோரின் சமீபத்திய கருத்துக்கள், ஆளும் கட்சி நீதித்துறையை பலவீனப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட வழியாக விளக்க முடியாது என்று அவர் வாதிட்டார். அது கட்சியின் (பாஜக) கருத்து அல்ல என்று தான் கருதுவதாகவும் நீதிபதி கவாய் குறிப்பிட்டார்.
மேலும் நீதித்துறையின் அதிகப்படியான தலையீடு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், கொள்கை முடிவுகள் தொடர்பான பொது நல வழக்குகளை கையாள உச்ச நீதிமன்றம் சமீப காலமாக தயங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை நீதிபதி கவாய் நிராகரித்தார்.
நவம்பர் 13 ஆம் தேதி, அவர் தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்காமல் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
- மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்தார்.
- நீதிபதி கவாய், மே 14, 2025 முதல் தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் வருகின்ற மே 13 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்க சஞ்சீவ் கன்னாவின் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
அதன்படி உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாயை (B.R. காவாய்) நியமிக்க சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்தார்.
இந்நிலையில் இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர். கவாய் நியமனத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சமூக ஊடக தளமான X இல் பகிர்ந்துள்ளார்.
தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் நீதிபதி கவாய், மே 14, 2025 முதல் தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.
வரும் நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் அவர் இந்த பதவியில் தொடர்வார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த கவாய், பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட அமர்வில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்றுள்ளார்.
- தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய அலுவல் பணிகளும் முடித்து வைக்கப்பட்டன.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்மூலம் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்றுள்ளார். கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
பின்னர் 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள டி.ஒய்.சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10 வரை தலைமை நீதிபதியாக நீடிப்பார்.
- கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றிகரமான வக்கீல்களாக மாறலாம்.
- ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 14-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. போக்சோ குற்ற வழக்குகள் மீதான விசாரணை, புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீ திமன்றத்தில் செயல்பட்டு வந்தது. போக்சோ வழக்கை தலைமை நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து வந்தார்.
இந்நிலையில் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்க விரைவு நீதி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி நீதிபதியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த போக்சோ நீதிமன்ற திறப்பு விழா இன்று நடந்தது. ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா போக்சோ விரைவு நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நேரு எம்.எல்.ஏ , ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் மற்றும் புதுவை நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
வக்கீல்கள் அமரும் இருக்கையில் நீதிபதி ராஜா, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது போக்சோ நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போக்சோ நீதிமன்ற நீதிபதி சோபனாதேவி தலைமையில் விசாரணை நடந்தது. முதல் குற்றவாளியை அழைத்த போது மின்சாரம் தடைபட்டது.
இதனால் வந்திருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர். அப்போது நீதிபதி ராஜா, சற்று கோபத்துடன் மின்சாரத்தை சரி செய்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? என கேட்டார். தொடர்ந்து ஊழியர்கள் மின் தடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10 நிமிடம் மின்சாரம் இல்லை. இருப்பினும் 5 குற்றவாளிகள் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இதன்பின் அனைவரும் விழா மேடைக்கு வந்தனர். அங்கு போக்சோ விரைவு நீதிமன்ற பெயர் பலகையை நீதிபதி ராஜா திறந்து வைத்தார்.
விழாவில் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது:-
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தில் 29 நீதிமன்றங்களாக செயல்பட உள்ளது. புதுவையில் மட்டும் போக்சோ நீதிமன்றத்தோடு 18 நீதிமன்றங்கள் செயல்பட உள்ளன. அதிசயம், அற்புதமான மிக கடுமையான சட்டங்கள் போக்சோ நீதிமன்றத்தில் உள்ளன.
பல வழக்கில் கொலை, கொள்ளை அடித்தவர்களுக்கு மிகப்பெரும் தண்டனை தரப்படுகிறது. போக்சோவில் விசித்திரமான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான சான்றிதழ், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு காயம், சாட்சிகள் இருந்தால் அவர் குற்றவாளி. குற்றத்தை செய்யவில்லை என அவரின் வக்கீல்கள்தான் நிரூபிக்க வேண்டும்.
குழந்தைகளை பயமுறுத்துவதுபோல கேள்வி கேட்க முடியாது. போக்சோ குற்றத்தில் ஈடுபட்டால், இறுதி மூச்சு இருக்கும் வரை ஆயுள்தண்டனை விதிக்கப்படும். வக்கீல்கள் போக்சோ வழக்கை சாதாரணமாக நடத்தி விட முடியாது.
இந்த வழக்கிற்கு இங்கு மட்டும்தான் ஜாமீன் பெற முடியும். ஒரு ஆண்டுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கை கையாள வக்கீல்கள் திறமை களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தையின் விபரங்களை வெளியில் தெரிவிக்கக்கூடாது. பெற்றோர்களால் வழக்கை நடத்த முடியாவிட்டால், சட்டப்பணிகள் ஆணையம் மூலம் வக்கீல்களை பெறலாம்.
பாதிக்கப்பட்ட குழந்தை என நீதிபதி முடிவு செய்துவிட்டால், வழக்கு நடைபெறும்போதே குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட முடியும். கொடுமையான குற்றம் செய்திருந்தால் மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.
காலங்கள் மாறி வருகிறது. காலதாமதமின்றி நீதி வழங்கப்படுகிறது. சட்டங்களை அறிந்து கொள்ளாமல் வக்கீல்கள் நீதிமன்றதுக்கு வர முடியாது. வெற்றிகரமான வக்கீல்களாக மாற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். சட்டங்களை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வக்கீல்கள் எப்படி, எதை பேச வேண்டும் என அறிந்து பேச வேண்டும். இதனால் வக்கீலும், வக்கீல் தொழிலும், நீதிமன்றமும், நாடும் உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.