என் மலர்
இந்தியா

இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது - தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
- மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்தது.
- உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி14 கேள்விகளை எழுப்பினார்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி மசோதாக்கள் மீது முடிவெடுக்க உச்சநீதிமன்றம் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்தது.
இதனால் கொந்தளித்த துணை ஜனாதிபதி தன்கர் உச்சநீதிமன்றம் சூப்பர் பாராளுமன்றம் போல செயல்படுகிறது என்றும் நீதித்துறை அதன் வரம்புக்குள் தான் இருக்க வேண்டும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "அரசியலமைப்பு மட்டுமே உயர்ந்தது என்றும், பாராளுமன்றம் அல்லது நிர்வாகக் குழு தங்கள் கடமைகளைச் செய்யத் தவறும் போதெல்லாம் நீதித்துறை தலையிடும்" என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து, ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு விதித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி14 கேள்விகளை எழுப்பினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பி.ஆர். கவாய் மீண்டும் பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் பேசிய பி.ஆர். கவாய், "நீதித்துறையோ, அரசாங்கமோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல. இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது. 3 தூண்களும் அரசமைப்பின்படி நடக்க வேண்டியவை. அரசியலமைப்பைத் திருத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது, ஆனால் பாராளுமன்றம் அடிப்படை அரசியலமைப்பு கட்டமைப்பைத் மாற்ற முடியாது என்று அவர் கூறினார்.






