என் மலர்

  நீங்கள் தேடியது "CJI"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்க உள்ளார்.
  • உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்க உள்ளார்.

  புதுடெல்லி:

  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ல் நிறைவடைகிறது. எனவே, புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்க உள்ளார்.

  தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித்துக்கு, தற்போதைய தலைமை நீதிபதி ரமணா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி நியமிக்கப்பட்ட நீதிபதி யு.யு.லலித், முத்தலாக் வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்றவர். அயோத்தியில் சர்ச்சைகள் நிறைந்த ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிப்பதில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ரஞ்சன் கோகாய், அவசர வழக்குகள் விசாரிக்கும் முன் வழிமுறைகள், தகுதிகள் ஆகியவற்றை வகுக்க வேண்டும் என கூறியுள்ளார். #CJIRanjanGogoi
  புதுடெல்லி:

  சுப்ரீம் கோட்டின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

  நீதிபதி ரஞ்சன் கோகாயிடம், வழக்கறிஞர்கள் அவசர வழக்காகச் சிலவற்றை விசாரிக்கக் கோரி முறையிட்டனர். அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், இப்போது ஏதும் முறையிடாதீர்கள். நாம் குறிப்பிட்ட வழிமுறைகளையும், தகுதிகளையும் வகுத்துவிட்டு, எவ்வாறு, எந்த வகையில் முறையிடலாம் என்பதை முடிவு செய்யலாம்.

  யாராவது ஒருவர் நாளைத் தூக்கிலிடப்போகிறார்கள் என்றால் அதை அவசர வழக்காக விசாரிக்கலாம் அல்லது நாளை யாரையாவது வெளியேற்ற வேண்டும் என்றால் விசாரிக்கலாம். ஆதலால், அவசர வழக்கு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவகையில் அவசர வழக்காக எதையும் முறையிட வேண்டாம் என்று தெரிவித்தார்.

  மேலும், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திலும் ரஞ்சன் கோகாய் மரியாதை செலுத்தினார். தலைமை நீதிபதியாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். புதிய தலைமை நீதிபதி அக்டோபர் 3-ந்தேதி பதவியேற்க உள்ளார். #RanjanGogoi #CJI
  புதுடெல்லி:

  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது.

  தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதி நியமனத்திற்கான பணிகள் தொடங்கின. தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று முறைப்படி பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2-ம் தேதி ஓய்வுபெறுகிறார். ஆனால் அன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் அக்டோபர் 1-ம் தேதி அவரது கடைசி பணி நாளாகும். அக்டோபர் 3-ம் தேதி புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

  வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்படும் முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.

  கடந்த ஜனவரி மாதம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, உச்ச நீதிமன்ற செயல்பாடுகளை விமர்சித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 நீதிபதிகளில் ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #RanjanGogoi #CJI
  ×