search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government of India"

    • வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பின் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி பின்னரும், அங்கு வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர் கடந்த வாரம் திங்கட்கிழமை பதவியை ராஜினமா செய்தார். அதன்பின் ஏற்பட்ட வன்முறையில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வன்முறையில் அந்நாட்டில் மைனாரிட்டியாக இருக்கும் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்கும்படி குரல் எழுப்பப்பட்டு வருகின்றன. அண்டை நாடான இந்தியா வங்கதேசத்தில் இருந்து தப்பியோடி வரும் நபர்களை ஊடுருவ விடாமல் தடுத்து வருகிறது.

    இந்த நிலையில் வங்கதேச வன்முறை தொடர்பாக இந்தியா சர்வதேச அளவில் இந்த பிரச்சனையை எழுப்ப ணே்டும் என இந்தியா கூட்டணியின் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எந்த சமூகமும் பாதிக்கப்படக் கூடாது. அது மெஜாரிட்டி சமூகம் அல்லது மைனாரிட்டி இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், எந்த மதப்பிரினரும் என இருந்தாலும் வங்காளதேசத்தில் வன்முறைக்கு பாதிக்கப்படக்கூடாது.

    மனித உரிமை பாதுகாப்பு என்ற வகையில் இந்தியா இந்த பிரச்சனையை சர்வதேச அளவில் வலுவாக எழுப்ப வேண்டும். நமது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பிற்கு இது முக்கியமான பிரச்சனை.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    காலத்தின் சோதனைக்கேற்ப சரியோ தவறோ, பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் வன்முறைப் புரட்சிகள், ராணுவப் புரட்சிகள், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அரசுக்கு எதிராக நடந்தேறியுள்ளன என்பதற்கு உலக வரலாறு சாட்சி.

    ஒரு விஷயம் என்னவென்றால், மற்றொரு நாட்டின் அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி தனது சொந்த அரசியல் திட்டங்களை நிறைவேற்றும் எந்த சக்தியும் நாட்டை உள்நாட்டிலும் வெளியிலும் பலவீனப்படுத்துகிறது என்பதை வரலாறு கற்பிக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • ராகுல் டிராவிட்டின் சாதனைகள் நாடு முழுவதும் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
    • அதனால் இந்தியாவின் மிகப்பெரிய மரியாதையை ராகுல் டிராவிட்டுக்கு அளிக்க வேண்டும்.

    மும்பை:

    டி20 உலகக்கோப்பை தொடரை 17 ஆண்டுகளுக்கு பின் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் பிசிசிஐ தரப்பில் ராகுல் டிராவிட்-க்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

    ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, உலகக்கோப்பை இறுதிப்போட்டி மற்றும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 3 ஐசிசி இறுதிப்போட்டிகளில் விளையாடி, ஒரு முறை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல் யு19 பயிற்சியாளராகவும் ராகுல் டிராவிட் உலகக்கோப்பையை வென்றுள்ளார்.

    3 ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவதற்கு முன்பாக, ராகுல் டிராவிட் யு19 இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். அதேபோல் என்சிஏ-வில் தலைவராகவும் பொறுப்பில் இருந்தார். பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்ற போது, ராகுல் டிராவிட் என்சிஏ தலைவராக வந்தார்.

    அப்போது முதல் இந்திய இளம் வீரர்களை தயார்ப்படுத்தி வந்துள்ளார். சுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, ரவி பிஷ்னாய், அபிஷேக் சர்மா, ரியான் பராக் என்று ஏராளமான வீரர்களை உருவாக்கியுள்ளார். அதேபோல் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், சிராஜ், சஞ்சு சாம்சன், விஹாரி உள்ளிட்டோரும் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் உருவான வீரர்கள் தான். அந்த அளவிற்கு இந்திய அணியில் ராகுல் டிராவிட்டின் தாக்கம் உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அரசு ராகுல் டிராவிட்டுக்கு பாரத் ரத்னா விருது அளித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாரத் ரத்னா விருது சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. அந்த தலைவர்களின் தாக்கம் அரசியல் கட்சியினரோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்ததால், விருதுகள் அளிக்கப்பட்டன.

    அந்த தலைவர்களின் தாக்கம் அரசியல் கட்சியினரோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்ததால், விருதுகள் அளிக்கப்பட்டன. தற்போது ராகுல் டிராவிட்டின் சாதனைகள் நாடு முழுவதும் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதனால் இந்தியாவின் மிகப்பெரிய மரியாதையை ராகுல் டிராவிட்டுக்கு அளிக்க வேண்டும்.

    மக்கள் அனைவரும் இந்த கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்திய நாட்டின் தலைசிறந்த மகன் பாரத் ரத்னா ராகுல் டிராவிட் என்று சொல்வதற்காக காத்திருக்கிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    இதற்கு முன்பாக கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு 2014-ம் ஆண்டு பாரத் ரத்னா விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 70 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சட்ட வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர்
    • பொதுமக்கள் நலனிற்காக பல தடைகற்களை உச்ச நீதிமன்றம் நீக்கியது என்றார் தலைமை நீதிபதி

    மத்திய அரசாங்கத்தின் உதவியுடனும் சர்வதேச சட்ட அமைப்பு (International Legal Foundation), ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UN Development Programme) மற்றும் ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பு (UNICEF) ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் இணைந்து, இந்திய தேசிய சட்ட சேவை ஆணையம் (NALSA), அனைவருக்குமான சட்ட உதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதல் பிராந்திய மாநாட்டை இந்திய தலைநகர் புது டெல்லியில் நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடந்தது.

    இந்த மாநாட்டில் உலகின் 70 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முக்கிய சட்ட வல்லுனர்கள் பங்கேற்றனர்.

    இதில் பங்கேற்று பேசிய இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்ததாவது:

    1980களின் ஆரம்பத்தில் இருந்தே இந்திய உச்ச நீதிமன்றம், நீதியை நிலைநாட்ட புரட்சிகரமான முயற்சிகளை எடுத்து அதன் மூலம் பொது நலன் சார்ந்த விஷயங்களில் நீதி பரிபாலனம் சிறப்பாக நடைபெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தை நாட தடையாய் இருந்த வழிமுறை சிக்கல்களையும், உச்ச நீதிமன்றம் எளிமைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமூக-பொருளாதார விஷயங்களில் அநீதி ஏற்பட்டால் அவை விரைவாக சரி செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற காரணங்களால் இந்திய உச்ச நீதிமன்றம் மக்கள் நீதிமன்றமாக கருதப்படுகிறது. அனைத்துவிதமான மேல்முறையீடுகளையும், சட்ட உதவி மறுக்கப்படும் சூழ்நிலை குறித்த வழக்குகளையும் மிகுந்த கவனத்துடன் கையாளுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.


    ×