search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    வங்கதேச பிரச்சனையை இந்தியா சர்வதேச அளவில் எழுப்ப வேண்டும்: அகிலேஷ் யாதவ்
    X

    வங்கதேச பிரச்சனையை இந்தியா சர்வதேச அளவில் எழுப்ப வேண்டும்: அகிலேஷ் யாதவ்

    • வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பின் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி பின்னரும், அங்கு வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர் கடந்த வாரம் திங்கட்கிழமை பதவியை ராஜினமா செய்தார். அதன்பின் ஏற்பட்ட வன்முறையில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வன்முறையில் அந்நாட்டில் மைனாரிட்டியாக இருக்கும் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்கும்படி குரல் எழுப்பப்பட்டு வருகின்றன. அண்டை நாடான இந்தியா வங்கதேசத்தில் இருந்து தப்பியோடி வரும் நபர்களை ஊடுருவ விடாமல் தடுத்து வருகிறது.

    இந்த நிலையில் வங்கதேச வன்முறை தொடர்பாக இந்தியா சர்வதேச அளவில் இந்த பிரச்சனையை எழுப்ப ணே்டும் என இந்தியா கூட்டணியின் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எந்த சமூகமும் பாதிக்கப்படக் கூடாது. அது மெஜாரிட்டி சமூகம் அல்லது மைனாரிட்டி இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், எந்த மதப்பிரினரும் என இருந்தாலும் வங்காளதேசத்தில் வன்முறைக்கு பாதிக்கப்படக்கூடாது.

    மனித உரிமை பாதுகாப்பு என்ற வகையில் இந்தியா இந்த பிரச்சனையை சர்வதேச அளவில் வலுவாக எழுப்ப வேண்டும். நமது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பிற்கு இது முக்கியமான பிரச்சனை.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    காலத்தின் சோதனைக்கேற்ப சரியோ தவறோ, பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் வன்முறைப் புரட்சிகள், ராணுவப் புரட்சிகள், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அரசுக்கு எதிராக நடந்தேறியுள்ளன என்பதற்கு உலக வரலாறு சாட்சி.

    ஒரு விஷயம் என்னவென்றால், மற்றொரு நாட்டின் அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி தனது சொந்த அரசியல் திட்டங்களை நிறைவேற்றும் எந்த சக்தியும் நாட்டை உள்நாட்டிலும் வெளியிலும் பலவீனப்படுத்துகிறது என்பதை வரலாறு கற்பிக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×