என் மலர்
நீங்கள் தேடியது "akhilesh yadav"
- மத்திய அரசின், வீடுகள் தோறும் தேசிய கொடி பிரசாரத்தையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் அகிலேஷ் யாதவ் குறை கூறினார்.
- மத்திய அரசு அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துகிறது.
கன்னாஜ் :
உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். அப்போது அவர், மத்திய அரசு அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'உங்கள் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது, அரசியல்சாசனம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த மக்கள் (பா.ஜனதா) அதிகமாக வலுவடைந்தால் உங்கள் வாக்குரிமை பறிபோகும். இதை நீங்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது' என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 'அண்டை நாடான சீனாவில் தேர்தல் ஏதாவது நடக்கிறதா? அதற்கு அப்பால் போனால் ரஷியாவிலும் தேர்தல்கள் இலலை. பாகிஸ்தானில் ராணுவம் விரும்பும் அரசு அமைகிறது. மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தேர்தல்கள் இல்லை. எனவே எச்சரிக்கை தேவை' என கூறினார்.
மத்திய அரசின், வீடுகள் தோறும் தேசிய கொடி பிரசாரத்தையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் அகிலேஷ் யாதவ் குறைகூறினார். வரலாற்றை பின்னோக்கி பார்த்தால், இன்று ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றக்கூறும் இவர்கள், ஒரு காலத்தில் மூவர்ண கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
- சமீபத்தில் நடந்த உத்தர பிரதேசம் மாநில மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதி தோல்வி அடைந்தது.
- சமாஜ்வாதி கட்சியின் அனைத்து நிர்வாக அமைப்பு பதவிகளை கலைத்து அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கட்சியின் தேசிய தலைவர் பதவி தவிர, அதன் அனைத்து அமைப்புகளின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாக அமைப்புகள் உடனடியாக கலைக்கப்படுகிறது என தெரிவித்தார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டரில், சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ், கட்சியின் மாநிலத் தலைவர் தவிர, கட்சியின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாக அமைப்புகளை உடனடியாகக் கலைக்கப்படுகின்றன. தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், இளைஞர், மகளிர் அணிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியின் மாவட்டத் தலைவர்களும் கலைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
மேலும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
- ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்தை ராஜ்நாத்சிங் கேட்டறிந்தார்
குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகளில் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவு செய்ய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
இந்நிலையில், இந்த தேர்தலில் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பணியை பாஜக தொடங்கி உள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் நிதிஷ்குமார், பிஜூ ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் தொலைபேசி மூலம் விவாதித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்தை ராஜ்நாத்சிங் கேட்டறிந்ததாகவும், எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியாகவே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளர் பெயரை அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள், ராஜ்நாத்சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் குறிப்பிட்ட வேட்பாளர் பெயர் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.
வேட்பாளரின் பெயர் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படுவதை உறுதி செய்வதில் காங்கிரஸ் ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்றும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இருப்பினும், இதுதொடர்பான இறுதி முடிவை கட்சி எடுக்கும். ராஷ்டிரீய லோக்தளத்துடன் கூட்டணி இறுதியாகி விட்டது. தொகுதி பங்கீடு தான் இறுதி செய்யப்பட வேண்டும். ஒவைசி கட்சியுடனோ, திரிணாமுல் காங்கிரசுடனோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ‘‘மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கீ பாத்’ என்ற ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு உரையாற்றுவார். அந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோடை டிவி மூலம் நிகழ்த்தியது போல் இருந்தது.
பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முடியாமல் அமைதியாக இருக்கும் நிலையே ஏற்பட்டது. இது பாஜக-வின் பிரியாவிடைக்கான (Farewell) பத்திரிகையாளர் சந்திப்பு’’ என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ், பிரதீக் யாதவ் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கின் தன்மை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து காங்கிரஸ் நிர்வாகி விஸ்வநாத் சதுர்வேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக சி.பி.ஐ. 2 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. #SC
பாகிஸ்தான் எல்லையில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பிடித்து வைத்திருப்பதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று வெளியிட்ட தன்னுடைய டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு மனஉறுதி மற்றும் தைரியத்தை வழங்கவும் கடவுளிடம் நான் வேண்டி கொள்கிறேன். இந்த நாடும், நாட்டு மக்களும் அவருக்கு எப்போதும் துணை நிற்பார்கள் என்று கூறியுள்ளார்.

