என் மலர்

  நீங்கள் தேடியது "Masood Azhar"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கருப்பு பட்டியலில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசாரை வைக்க அமெரிக்கா புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. #MasoodAzhar #UNBlacklist
  வாஷிங்டன்:

  இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி நடந்த தற்கொலைத் தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

  இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. ஆனால் சீனா தனது வீட்டோ அதிகாரததைப் பயன்படுத்தி, இந்த முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.  இந்நிலையில், மசூத் அசாரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு வரைவு தீர்மானத்தை அனுப்பி உள்ளது.

  இந்த தீர்மானம் நிறைவேறினால் மசூத் அசாருக்கு எதிராக ஆயுத தடை, பயண தடை விதிக்கப்படுவதோடு அவரது சொத்துக்களும் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #MasoodAzhar #UNBlacklist

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக பிரான்சு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. #MasoodAzhar
  பெர்லின்:

  புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மவுலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்க கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 4-வது தடவையாக தடுத்து நிறுத்தியது.  இதற்கிடையே புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை சர்வதேச நாடுகளிடம் இந்தியா கொண்டு சென்றது. அதை தொடர்ந்து பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக பிரான்சு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு பெருகியுள்ளது.

  தீர்மானத்துக்கு தற்போது ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் ஹன்ஸ் கிறிஸ்டியன் வின்கலர் உறுதி செய்துள்ளார்.

  இதுகுறித்து ஐரோப்பிய யூனியனில் ஆலோசிக்கப்பட்டது.அதில் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் அனைத்தும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க கோரும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

  இதன் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பினர்களில் 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. #MasoodAzhar
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள சொத்துக்களை முடக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. #MasoodAzhar #Pulwamaattack
  பாரிஸ்:

  காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.

  இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம்தான் காரணம் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

  இதற்கிடையில், பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனாக இருக்கும் மசூத் அசாரை தடை செய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சார்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சீனா முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டது.

  இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றதால் அந்த இயக்கத்துக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கப்போவதாக பிரான்ஸ் அரசு இன்று அறிவித்துள்ளது.

  பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. #MasoodAzhar #Pulwamaattack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இந்திய அரசிடம் இருந்து வராத நிலையில் மசூத் அசாரை கைது செய்ய மாட்டோம் என்னும் நிலைப்பாட்டில் பாகிஸ்தான் அரசு உள்ளதாக தெரியவந்துள்ளது. #Pakistangovernment #MasoodAzhar #Pulwamaattack
  இஸ்லாமாபாத்:

  காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.  இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதற்கான ஆதாரங்களை இந்திய அரசு கடந்த மாதம் 27-ம் தேதி பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்து அங்கு இருக்கும் மசூத் அசார் உள்பட 22 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

  ஆனால், இந்திய அரசு அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அவர்கள் அனுப்பிய தகவலில் இவர்களுக்கு எல்லாம் தொடர்பு இருப்பதாக ‘கருதப்படுவதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வலிமையான ஆதாரங்கள் இல்லாததால் நாங்கள் மசூத் அசாரை கைது செய்யவோ, தடுப்பு காவலில் அடைத்து வைப்பதற்கோ எவ்வித முகாந்திரமும் இல்லை என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  உள்நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தேசிய செயல் திட்டத்தின் அடிப்படையில் மசூத் அசாரின் சகோதரர், மகன் உள்பட சிலரை கைது செய்து ஒருமாத காலம் தடுப்பு காவலில் அடைத்து வைத்திருக்கிறோம்.

  ஆனால், மசூத் அசாரின் பெயர் உள்நாட்டு பயங்கரவாதிகள் பட்டியலில் இல்லை. பாகிஸ்தானில் மசூத் அசார் எவ்வித வன்முறை தாக்குதலும் நடத்தியதில்லை. பிறகு, நாங்கள் ஏன் அவரை கைது செய்ய வேண்டும்? எனவும் அந்த உயரதிகாரி உள்நாட்டு ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

  இதற்கிடையில், தடைசெய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரின் பெயரை சேர்க்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சார்பில் ஐ.நா.பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சீனா முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டது.

  இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றதால் அந்த இயக்கத்துக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கப்போவதாக பிரான்ஸ் அரசு இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Pakistangovernment #MasoodAzhar #Pulwamaattack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா 4-வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. #MasoodAzhar #JeM #UNResolution #MEA
  ஜெனீவா:

  காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், ஆயுதங்கள் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், அவர் இயங்குவதற்கு அனுமதித்து வரும் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று இந்தியா முயற்சி மேற்கொண்டது.

  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஏற்கனவே மூன்று முறை முயற்சிகள் நடைபெற்றாலும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டது. மசூத் அசாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என சீனா கூறி வருகிறது.

  இந்த சூழலில், ஜெனீவாவில் உள்ள  ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. பெரும்பாலான நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தயாராக இருந்த போதிலும், சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டது. இதனால், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.  ஐநாவுக்கு சீனா அனுப்பிய குறிப்பில், மசூத் அசாருக்கு எதிராக தடை கோரும் பரிந்துரையை ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக கூறி ஆதரிக்க மறுத்துள்ளது.  சீனா 4-வது முறையாக மசூத் அசாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.

  இதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் பிப்ரவரி 14ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்ற, பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மீது சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுப்பதற்கு தடையாக உள்ளது.

  இந்திய குடிமக்கள் மீதான கொடூரமான தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாத குழுக்களின் தலைவர்களை நீதியின் முன் நிறுத்த தேவையான அனைத்து வழிமுறைகளையும் இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும்” என கூறப்பட்டுள்ளது.  #MasoodAzhar #JeM #UNResolution #MEA

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் மீது கூறிய குற்றச்சாட்டை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். #Rahulgandhi #Congressboothworkers #AjitDoval #MasoodAzhar
  புதுடெல்லி:

  டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட தீர்மானித்துள்ளது. இந்நிலையில், மேற்கண்ட 7 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

  ராகுல் காந்தி பேசுகையில் ‘கடந்த 1999ம் ஆண்டு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க வேண்டி , இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது. அப்போது 161 பயணிகள் பயணம் செய்தனர்.  புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சிறையிலிருந்து யார் விடுவித்தது. எந்த கட்சி விடுவித்தது? என சற்றே சிந்தித்து பாருங்கள். முந்தைய பாஜக அரசும், தற்போதைய தேசிய  பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜி்த் தோவலும் சேர்ந்து, விமானத்தில் மசூத் அசாரை அழைத்துச் சென்று, கந்தகாரில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். புல்வாமா தாக்குதலுக்கு அஜித் தோவல் ஒரு கருவியாக செயல்பட்டுள்ளார்’ என குற்றம் சாட்டினார்.  இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு தேசிய பாதுகாப்புத்துறை விளக்கம் கூறியுள்ளது. இதில், ‘ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க சொன்னது அன்றைய வாஜ்பாய் அரசின் முடிவாகும். இந்த முடிவு விமானத்தில் பயணம் செய்த 161 பயணிகளின் பாதுகாப்பினை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகும். மசூத் அசாரின் விடுதலைக்காக எடுக்கப்படவில்லை. இந்த முடிவு நல்லதோ கெட்டதோ அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அதைவிடுத்து அரசின் முடிவுகளை செயல்படுத்திய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி பேசுவது சரியானதல்ல. மேலும் அஜித் தோவல் மசூத் அசாருடன் விமானத்தில் பயணித்ததாக கூறியது தவறான தகவல் ஆகும்’ என தெரிவித்துள்ளது. #Rahulgandhi #Congressboothworkers #AjitDoval #MasoodAzhar  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உலக நாடுகள் வலியுறுத்தியிருக்கின்றன. #MasoodAzhar
  நியூயார்க்:

  புல்வாமாவில் துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் நுழைந்து, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

  இதில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாத தளபதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிகிறது.  இந்த நிலையில், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா-வின் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

  மேலும் மசூத் அசார் வெளிநாடு செல்ல தடை விதிக்கவும், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கவும் பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. #MasoodAzhar #UNSecurityCouncil #PulwamaAttack

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புல்வமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் முன்னர் இந்திய அதிகாரி விட்ட ஒரே அறையில் மளமளவென ரகசியத்தை கொட்டினான். #oneslap #armymanrattled #MasoodAzhar
  புதுடெல்லி:

  புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான மசூத் அசார் கடந்த 1994-ம் ஆண்டில் போர்சுகல் நாட்டின் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றான்.

  இதை கண்டுபிடித்த இந்திய அதிகாரிகள் காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் மசூத் அசாரை கைது செய்தனர்.

  அப்போது கோட் பால்வால் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த அவனிடம் பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் அவற்றின் ஆதரவுடன் காஷ்மீரிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் ரகசியமாக செயல்படும் அமைப்புகள் தொடர்பாக ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

  ஆரம்பத்தில் உண்மையை சொல்ல சற்று முரண்டுப்பிடித்த மசூத் அசார், ஒரு ராணுவ அதிகாரி அவனை ஓங்கி ஒரேமுறை விட்ட ஒரு அறைக்கு பின்னர் அவனிடமிருந்து வாக்குமூலம் பெறுவது அவ்வளவு கடினமாக இல்லை என சிக்கிம் மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. அவினாஷ் மொஹானனே என்பவர் தற்போது தெரிவித்துள்ளார்.  இதற்கிடையில், நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லி வந்த பயணிகள் விமானத்தை ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் நகருக்கு கடத்திசென்ற பயங்கரவாதிகள், அதில் இருந்த பயணிகளை விடுதலை செய்ய வேண்டுமானால் காஷ்மீர் சிறையில் இருக்கும் மசூத் அசாரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.

  பயணிகளை உயிரை காப்பாற்றுவதற்காக அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 31-12-1994 அன்று மசூத் அசாரை விடுதலை செய்தது.

  பயங்ரவாதிகளின் நிபந்தனைக்கு அடிபணிந்த மத்திய அரசின் சார்பில் அந்நாள் வெளியுறவுத்துறை மந்திரி பயங்கரவாதிகள் மசூத் அசார், ஒமர் ஷேக், முஸ்தாக் அஹமத் ஸர்கார் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்து தனிவிமானம் மூலம் கந்தஹாருக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்து விட்டு, கடத்தப்பட்ட விமான பயணிகளை மீட்டு அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மாறிமாறி வசித்துவரும் மசூத் அசார் தற்போது பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அந்நாட்டின் உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் பாதுகாப்பில் சகலவசதிகளுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. #oneslap #armymanrattled #MasoodAzhar 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் பதன்கோட் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மசூத்அசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #JeM #MasoodAzhar
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ- முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் (50). இந்தியாவில் தற்கொலை தாக்குதல்கள் நடக்க காரணமாக இருந்தவன். 2001-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தாக்குதல், 2005-ம் ஆண்டு நடைபெற்ற அயோத்தியா தாக்குதல் மற்றும் 2016-ம் ஆண்டு பதன்கோட் விமான படை தளம் தாக்குதல்களில் தொடர்புடையவன்.

  தற்போது இவன் முதுகு தண்டுவடம் மற்றும் சிறுநீரக கோளாறினால் அவதிப்பட்டு வருகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் அவன் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் தங்கி கடந்த 1½ ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறான்.

  எனவே இவனது சகோதரர்கள் ரயூப் அஸ்கர், ஆதார் இப்ராகீம் ஆகியோர் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை பிளவுபடுத்தி நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் இந்த இயக்கம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

  மசூத் அசார் உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக கிடப்பதை இந்திய உளவுத்துறை உறுதி செய்துள்ளது. ஆனால் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளால் இதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இவனை பாகிஸ்தானில் உள்ள பகவல் பூரிலோ வேறு எங்குமோ காண முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.

  மசூத்அசார் கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, பயங்கரவாதிகள் விமானத்தை காந்தகாருக்கு கடத்தி அதில் இருந்த 814 பயணிகளை பணய கைதிகளாக வைத்தனர். பின்னர் மசூர் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை மீட்டு சென்றனர். இவனை சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது. அதை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. #JeM #MasoodAzhar
  ×