search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hizbul Mujahideen"

    ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். #MilitantArrest
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து, அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதியை கைது செய்தனர்.

    விசாரணையில், கைதான பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்தவன் என்பதும், குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ரமிஸ் அகமது தர் என்பதும் தெரிய வந்தது. அங்கிருந்து வெடிபொருள்களையும், ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். #MilitantArrest
    புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. #PulwamaAttack #CRPF #HizbulMujahideen #RiyazNaikoo
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி 2,500 பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்.) 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்து தீவிரவாதி மோத செய்தான்.

    இதில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். இது நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

    தாக்குதலை நடத்தியது உள்ளூரைச் சேர்ந்த 22 வயது ஆதில் அகமதுதர் என்பது தெரிந்தது. அவன் 350 கிலோ வெடிமருந்து நிரப்பிய காரை ஓட்டி வந்து தாக்குதல் நடத்தியதும் தெரிந்தது.

    இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.

    இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இந்த தாக்குதல் காஷ்மீர் இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் என்றும் கூறி உள்ளது.

    காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான ரியாஸ் நைகூ பேசியதாக கூறப்படும் 17 நிமிட ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ரியாஸ் நைகூ பேசியதாவது:-

    ஆடியோவில் பேசிய ரியாஸ் நைகூ

    சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் (புல்வாமா) காஷ்மீர் மக்கள் மீதான அட்டூழியங்களுக்காக நடத்தப்பட்டது. பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் இருக்கும் வரை தொடர்ந்து அழுகுரல் கேட்டு கொண்டேதான் இருக்கும்.

    ராணுவம் இங்கு இருக்கும் வரை உங்களது வீரர்களின் சவப்பெட்டிகள் நிரம்பி கொண்டே இருக்கும். நாங்கள் சாக இருக்கிறோம். ஆனால் உங்களை வாழவிட அனுமதிக்க மாட்டோம். எங்கள் உயிர்களை தியாகம் செய்ய துணிந்து விட்டோம்.

    சரண் அடைவதை விட இறப்பதற்கே நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். 15 வயது சிறுவர் கூட தற்கொலை படை பயங்கரவாதியாக மாறி ராணுவ வாகனத்தை தகர்க்கும் நாள் வெகு தூரம் இல்லை. அவர்கள் (ராணுவம்) இங்கு இருக்கும்வரை இந்தகைய தாக்குதல் நீடிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PulwamaAttack #CRPF #HizbulMujahideen #RiyazNaikoo
    காஷ்மீர் மாநிலத்தில் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் காணாமல் போன சிறப்பு போலீஸ்படை அதிகாரி இர்பான் அகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஸ்ரீநகர் :

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டதில் உள்ள பாம்போர் காவல் நிலையத்தில்  சிறப்பு போலீஸ்படை அதிகாரியாக பணியாற்றி வருபவர் இர்பான் அகமது. இவர் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் நேற்று மாயமானார். இவரை தீவிரமாக தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர்.

    இருப்பினும், அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில் இர்பான் அகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஹிஸ்புல் முஜாகிதீன் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனை காஷ்மீர் மாநில போலீசாரும் உறுதிபடுத்தியுள்ளனர்.

    மேலும், காஷ்மீர் மாநில போலீசார் அனைவரும் தங்களுடைய பணியை விட்டுவிட்டு பயங்கரவாத இயக்கத்தில் இணைய வேண்டும் என்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
    ×