என் மலர்
செய்திகள்

காஷ்மீரில் காணாமல் போன போலீஸ் அதிகாரி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக தகவல்
காஷ்மீர் மாநிலத்தில் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் காணாமல் போன சிறப்பு போலீஸ்படை அதிகாரி இர்பான் அகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர் :
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டதில் உள்ள பாம்போர் காவல் நிலையத்தில் சிறப்பு போலீஸ்படை அதிகாரியாக பணியாற்றி வருபவர் இர்பான் அகமது. இவர் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் நேற்று மாயமானார். இவரை தீவிரமாக தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர்.
இருப்பினும், அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில் இர்பான் அகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஹிஸ்புல் முஜாகிதீன் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனை காஷ்மீர் மாநில போலீசாரும் உறுதிபடுத்தியுள்ளனர்.
மேலும், காஷ்மீர் மாநில போலீசார் அனைவரும் தங்களுடைய பணியை விட்டுவிட்டு பயங்கரவாத இயக்கத்தில் இணைய வேண்டும் என்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Next Story