search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஜித் தோவல் குறித்து ராகுல் காந்தி சொன்னது தவறு - பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கம்
    X

    அஜித் தோவல் குறித்து ராகுல் காந்தி சொன்னது தவறு - பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கம்

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் மீது கூறிய குற்றச்சாட்டை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். #Rahulgandhi #Congressboothworkers #AjitDoval #MasoodAzhar
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட தீர்மானித்துள்ளது. இந்நிலையில், மேற்கண்ட 7 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

    ராகுல் காந்தி பேசுகையில் ‘கடந்த 1999ம் ஆண்டு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க வேண்டி , இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது. அப்போது 161 பயணிகள் பயணம் செய்தனர்.  புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சிறையிலிருந்து யார் விடுவித்தது. எந்த கட்சி விடுவித்தது? என சற்றே சிந்தித்து பாருங்கள். முந்தைய பாஜக அரசும், தற்போதைய தேசிய  பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜி்த் தோவலும் சேர்ந்து, விமானத்தில் மசூத் அசாரை அழைத்துச் சென்று, கந்தகாரில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். புல்வாமா தாக்குதலுக்கு அஜித் தோவல் ஒரு கருவியாக செயல்பட்டுள்ளார்’ என குற்றம் சாட்டினார்.



    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு தேசிய பாதுகாப்புத்துறை விளக்கம் கூறியுள்ளது. இதில், ‘ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க சொன்னது அன்றைய வாஜ்பாய் அரசின் முடிவாகும். இந்த முடிவு விமானத்தில் பயணம் செய்த 161 பயணிகளின் பாதுகாப்பினை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகும். மசூத் அசாரின் விடுதலைக்காக எடுக்கப்படவில்லை. இந்த முடிவு நல்லதோ கெட்டதோ அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அதைவிடுத்து அரசின் முடிவுகளை செயல்படுத்திய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி பேசுவது சரியானதல்ல. மேலும் அஜித் தோவல் மசூத் அசாருடன் விமானத்தில் பயணித்ததாக கூறியது தவறான தகவல் ஆகும்’ என தெரிவித்துள்ளது. #Rahulgandhi #Congressboothworkers #AjitDoval #MasoodAzhar



    Next Story
    ×