என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மசூத் அசார்"

    • பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்.
    • பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத முகாம் மீதும் தாக்குதல் நடத்தியது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அதில் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் முகாமும் ஒன்று.

    இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைபின் கமாண்டர் இல்யாஸ் காஷ்மீரி, இந்தியா தாக்குதலில் மசூத் அசாத்தின் குடும்பம் சிதைந்ததாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

    கடந்த 6ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற மிசன் முஷ்தபா மாநாட்டில் இல்யாஸ் காஷ்மிரி உருதில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

    பலர் துப்பாக்கிகள் ஏந்திய நிலையில், அவர்களுக்கு மத்தியில் இல்யாஸ் காஷ்மீரி "சித்தாந்தம்மற்றும் நாட்டின் புவிபரப்பு எல்லையை பாதுகாப்பதற்கு நாம் டெல்லி, காபூல், கந்தகார் மீது தாக்கதல் நடத்தினோம். அனைத்து தியாகங்களையும் செய்த பிறகு, மே 7ஆம் தேதி மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் பஹவல்பூரில் இந்திய தாக்குதலில் சிதைந்துவிட்டனர்" எனக் கூறுவதுபோல் வீடியோவில் உள்ளது.

    லாகூரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹல்வர்பூர் ஜமியா மஸ்ஜித் சுபான் அல்லாஹ் மீது இந்திய தாக்குதல் நடத்தியதில் மசூத் அசார் குடும்பத்தை சார்ந்த 10 பேரும், அவருக்கு நெருங்கிய உதவியாளர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. மசூத அசாரின் மூத்த சகோதரி, அவருடைய கணவர், மருமகன், அவருடைய மனைவி, ஐந்து குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.

    1999ஆம் ஆண்டு IC-184 விமானம் கடத்தப்பட்டபோது, விமானிகளுக்குப் பதிலாக அசார் ஜெயிலில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார். இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து 2019ஆம் அண்டு ஐ.நா. மசூத் அசார உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது. 2019 ஏப்ரலில் இருந்து மசூத் அசார் பொது வெளியில் காணப்படவில்லை. அவர் பஹவல்பூரில் பாதுகாப்பான இடத்தில் மறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜேஇஎம் இந்தியாவில் 2001 பாராளுமன்ற தாக்குதல், 2000-த்தில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல், 2019 புல்வாமா தற்கொலை படை தாக்குதல் போன்ற பயங்கரவாத செயல்களை நடத்தியுள்ளது.

    • அவர் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.
    • மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் வரை பலியானார்கள்.

    பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார். இவர் இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளில் முக்கியமானவர்.

    மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் அவர் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.

    சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறும் போது, மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை. அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் இடத்தை இந்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. அவர் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் காணப்பட்டதாக உளவுத் துறை தகவல்கள் வெளியாகி யுள்ளன.

    இந்த பகுதி மசூத் அசார் முதலில் வசித்த பாகிஸ்தானின் பஞ்சபர் மாகாணம் பஹவல்பூரில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    மசூத் அசார் தங்கியிருக்கும் இடத்தில் 2 மசூதிகளுடன், மதரசாக்கள், அரசினர் விடுதி, விருந்தினர் மாளிகைகளும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த இடம் ஜம்மு-காஷ்மீரில் இருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மசூத் அசார் சத்பரா சாலை பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள 9 முகாம்களை இந்தியா குண்டு வீசி சிதைத்தது. இதில் பஹவல்பூரில் உள்ள மசூத் அசாரின் தலைமை முகாம் அடங்கும். இதில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் வரை பலியானார்கள். மசூத் அசார் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் இந்திய எல்லை அருகே மசூத் அசார் பதுங்கி இருப்பதால் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

    • ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருந்து வருவதாக கூறுப்படும் தகவல் உண்மை இல்லை.
    • பாகிஸ்தான் மண்ணில் இருப்பதாக இந்திய அரசாங்கம் எங்களுடன் தகவலைப் பகிர்ந்து கொண்டால், அவரைக் கைது செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசார், இந்திய பாராளுமன்ற தாக்குதல், மும்பைத் தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் உள்ளிட்டவற்றில் தொடர்புடையவர். அவர் இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவர்.

    மசூத் அசார் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின்தலைவருமான பிலாவல் பூட்டோ தெரிவித்து உள்ளார். தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருந்து வருவதாக கூறுப்படும் தகவல் உண்மை இல்லை. அவர் பாகிஸ்தான் அரசின் காவலில் உள்ளார். மசூத் அசாரை பொறுத்தவரை அவரை கைது செய்யவோ அல்லது அடையாளம் காணவோ முடியவில்லை.

    அவர் பாகிஸ்தானில் இல்லை. ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்து இருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் பாகிஸ்தான் மண்ணில் இருப்பதாக இந்திய அரசாங்கம் எங்களுடன் தகவலைப் பகிர்ந்து கொண்டால், அவரைக் கைது செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். ஆனால் உண்மை என்னவென்றால் இந்திய அரசாங்கத்திடம் தகவல் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மசூத் அசார் வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்.
    • இந்தியாவின் தாக்குதலில் இடிந்த கட்டிடங்கள் மீண்டும் கட்டித் தரப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

    இந்திய பாதுகாப்புப் படையினர் கடந்த 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது வான் வழியாக துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமானது.

    அந்த வளாகத்தில் தங்கியிருந்த அந்த அமைப்பின் தலைவரும் ஐ.நா.வின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவருமான மசூத் அசாரின் மூத்த சகோதரி, 5 குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். எனினும் மசூத் அசார் வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்.

    இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சட்டபூர்வ வாரிசுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார். இதன்படி, 14 பேரை இழந்த மசூத் அசாருக்கு ரூ.14 கோடி கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், இந்தியாவின் தாக்குதலில் இடிந்த கட்டிடங்கள் மீண்டும் கட்டித் தரப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் உயிரிழந்தவர்களின் (தீவிரவாதிகள்) வாரிசுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • எல்லைப்பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
    • கொல்லப்பட்டவர்களில் 3 பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள்

    இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லைப்பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 5 முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் கொல்லப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொல்லப்பட்டவர்களில் 3 பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கடந்த 7-ந்தேதி இந்தியா நடத்திய தாக்குதலில் 5 பேரும் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக, இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் மற்றும் அவரது உறவினர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பின்பு, மசூத் அசார் உயிரோடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொல்லப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, இந்தியாவுடனான மோதல் போக்கை பயன்படுத்தி பாகிஸ்தானில் மொத்தமாக 39 இடங்களில் பலூசிஸ்தான் போராளிக் குழுவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். 

    • பாகிஸ்தானின் பகவல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மசூத் அசார் உரையாற்றியதாக தகவல் வெளியானது.
    • மசூத் அசார் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 2001-ல் பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், 2008-ல் மும்பை பயங்கரவாத தாக்குதல், 2019-ல் ஜம்மு-காஷ்மீரில் நடத்த புல்வாமா தாக்குதல் ஆகியவற்றின் பின்னால் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக வெளியான தகவல்களை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    சமீபத்தில் பாகிஸ்தானின் பகவல்பூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மசூத் அசார் உரையாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை என நீண்ட காலமாக மறுத்து வருகின்றனர். மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மையென்றால், இது பாகிஸ்தானின் போலித்தனத்தை அம்பலப்படுத்தும்.

    இந்தியா மீதான எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு உள்ளது. அவரை சட்டத்தின் முன் நிறுத்தி, பாகிஸ்தான் அரசு அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

    ×