என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை உயர்நீதிமன்றதுக்கு புதிய நீதிபதியை பரிந்துரைத்த  கொலிஜியம்!
    X

    சென்னை உயர்நீதிமன்றதுக்கு புதிய நீதிபதியை பரிந்துரைத்த கொலிஜியம்!

    • மே 26, 2025 அன்று கூட்டம் நடைபெற்றது.
    • தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சுஜோய் பால், கல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

    இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய முன்மொழிந்துள்ளது.

    அதன்படி, நாடு முழுவதும் 21 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

    இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் நீதிபதி M.M.ஸ்ரீவஸ்தவாவை நியமிக்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சுஜோய் பால், கல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வி. காமேஸ்வர் ராவ், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கும் மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

    மே 26, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தின் போது இறுதி செய்யப்பட்ட இந்தப் பரிந்துரைகள், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதையும், உயர் நீதிமன்றத் தலைவர்களிடையே நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

    Next Story
    ×