என் மலர்
நீங்கள் தேடியது "சஞ்சீவ் கன்னா"
- கடந்த ஆண்டை விட 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை இருமடங்காகி 4,439 வழக்குகள் பதிவாகி உள்ளன.
- 'டிஜிட்டல் கைது' மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் ரூ. 2,500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பிறப்பித்தது போல போலியாகத் தயாரிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த 73 வயது பெண்மணி ஒருவரை 'டிஜிட்டல் கைது செய்வதாக ஏமாற்றி சைபர் மோசடி கும்பல் ஒன்று ரூ.1 பணம் பறிக்க முயற்சித்துள்ளது.
இதுதொடர்பாக அப்பெண்மணி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு புகார் கடிதம் ஒன்றை எழுதினார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே மோசடிக்காரர்கள் போலி செய்திருப்பது நீதிபதிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைதொடர்ந்து டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
"போலி ஆவணங்கள் மூலம் டிஜிட்டல் கைது மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்" என்ற தலைப்பில் தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஸி அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.
இந்த மோசடிகளைச் சமாளிக்க மாநில காவல்துறையால் முடியுமா அல்லது நாடு தழுவிய விசாரணைக்கு மத்திய விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பது குறித்து இந்த அமர்வு முடிவு செய்யும்.
தேசிய சைபர் குற்றப் புகாரளிக்கும் இணையதளத்தில் (NCRP), 2024 இல் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 2,746 'டிஜிட்டல் கைது' வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட இருமடங்காகி 4,439 வழக்குகளாக உயர்ந்துள்ளது.
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 'டிஜிட்டல் கைது' மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் ரூ. 2,500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது.
- உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.
- சந்திரசூட் தான் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் வசித்த அரசு பங்களாவில் தான் தற்போது வசித்து வருகிறார்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தான் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் வசித்த அரசு பங்களாவில் தான் தற்போது வசித்து வருகிறார்.
இந்நிலையில், சந்திரசூட் அவர் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பொறுப்பேற்றார்
- பி.ஆர்.கவாய் புத்த மதத்தை பின்பற்றுபவர்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் நேற்றோடு நிறைவு பெற்றது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய்க்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். வரும் நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் அவர் இந்த பதவியில் தொடர்வார்.
இதன்மூலம் உச்சநீதிமன்றத்தில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த 2 ஆவது தலைமை நீதிபதி என்ற பெருமையை பி.ஆர்.கவாய் பெற்றுள்ளார். பி.ஆர்.கவாய் புத்த மதத்தை பின்பற்றுபவர்
2007 முதல் 2010 வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, இந்தியாவின் இரண்டாவது தலித் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பொறுப்பேற்றுள்ளார்.
பி.ஆர்.கவாய் 1960ஆம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிறந்தவர். 1985 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.
2003 ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்பு 2005 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்பு 2019-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் நேற்றோடு நிறைவு பெற்றது.
- நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் பி.ஆர்.கவாய் இந்த பதவியில் தொடர்வார்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் நேற்றோடு நிறைவு பெற்றது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாயை (B.R. காவாய்) நியமிக்க சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் நியமனத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பொறுப்பேற்கிறார். வரும் நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் அவர் இந்த பதவியில் தொடர்வார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த கவாய், பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட அமர்வில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீதித்துறையில் உண்மை பற்றாக்குறையாக இருப்பது கவலை அளிக்கிறது.
- பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக மாறுகிறார்கள்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (CJI) சஞ்சீவ் கன்னா இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) ஓய்வு பெற்றார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இன்று அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய சஞ்சீவ் கன்னா, "நீதித்துறை அமைப்பு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளால் ஆனது. பொதுமக்களிடம் நீதியின் மீது நம்பிக்கையை திணிக்க முடியாது. அதை சம்பாதிக்க வேண்டும்.
நீதித்துறையில் உண்மை பற்றாக்குறையாக இருப்பது கவலை அளிக்கிறது. உண்மைகளை மறைக்கவிட்டால் வழக்கில் வெற்றி பெற முடியாது என நம்புகிறேன். வழக்கறிஞர்கள் தங்கள் மனசாட்சியைக் காத்துக் கொள்ள வேண்டும். பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக மாறுகிறார்கள்.
அந்தப் பன்முகத்தன்மை நீதிமன்றம் நல்ல முடிவுகளை எட்ட உதவுகிறது. நீதிபதி பி.ஆர். கவாய் எனக்குப் பெரும் ஆதரவாக இருந்துள்ளார். நான் அவரிடம் ஒரு நல்ல தலைமை நீதிபதியைப் பார்க்கிறேன். அவர் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காக நிற்பார்" என்று தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சஞ்சீவ் கன்னா, 'ஒய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்றும் மாறாக சட்டத் துறையில் எதையாவது செய்யலாம்'' என இருப்பதாகவும் சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை குறித்து பதிலளித்த அவர், ''நீதித் துறையின் சிந்தனை தீர்க்கமானதாக இருக்க வேண்டும். இந்த வழக்கில் உள்ள நிறை மற்றும் குறைகளை ஆராய்ந்து பகுத்தறிவுடன் நாங்கள் முடிவு செய்கிறோம். நீங்கள் செய்தது சரியா? தவறா? என்பதை எதிர்காலம் உங்களுக்குச் சொல்லும்'' எனக் கூறினார்.
இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய சஞ்சீவ் கன்னா கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி பொறுப்பேற்றார். இதற்கு முன்பு, அவர் 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், பின்னர் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றினார். அவர் ஜனவரி 19, 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.
- சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் வருகின்ற மே 13 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
- சஞ்சீவ் கன்னாவின் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் வருகின்ற மே 13 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்க சஞ்சீவ் கன்னாவின் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
அதன்படி உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாயை (B.R. காவாய்) நியமிக்க சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு B.R. காவாய் அடுத்த உச்சநீதிமன்ற நீதிபதியாவது உறுதி செய்யப்படும். அதன்பின் B.R. கவாய் மே 14 இல் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார்.
வரும் நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் அவர் இந்த பதவியில் தொடர்வார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த கவாய், பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட அமர்வில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.
- மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள்
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 16ம் தேதி ஹோலி பண்டிகையின் போது இவரது வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைத்தனர்.
இதையடுத்து தீ பரவிய இடங்களில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதி வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் 500 ருபாய் நோட்டுகள் ரூ.15 கோடி வரை பணம் இருந்ததாக தகவல் வெளியானது. எரிந்து நாசமாவதற்கு முன் ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.

இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியில் இருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார்.
தற்போது விசாரணை நடந்து வரும் நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்ற சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா ஏற்கெனெவே 2021 வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர் ஆவார்.
தற்போதும் அவர் மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் என்று பார் குழு தலைவர் அனில் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
- தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிக்காலம் நவம்பர் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 11ம் தேதி சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்க உள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 11ம் தேதி சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்க உள்ளார்.
தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிக்காலம் நவம்பர் 10ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்தாண்டு மே மாதம் 13ம் தேதி வரை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்.
- டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார்.
டெல்லியில் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவியேற்பு விழா நடைபெற்றது.
உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார்.

சஞ்சீவ் கன்னா கடந்த 1960-ம் ஆண்டு டெல்லியில் பிறந்து 1983-ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார்.
பிறகு கடந்த 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். மேலும் சஞ்சீவ் கன்னா கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்ளில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






