என் மலர்

  நீங்கள் தேடியது "Suprem Court"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாஜ்மகால் உலக பாரம்பரிய சின்னம் என்று அளித்து உள்ள அங்கீகாரத்தை யுனஸ்கோ திரும்பப்பெற்று விட்டால் என்ன செய்வீர்கள்? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #TajMahal #SupremeCourt
  புதுடெல்லி:

  உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிற தாஜ்மகால், சுற்றுச்சூழல் மாசு காரணமாக தனது பொலிவை இழந்து வருகிறது.

  சமீபத்தில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக கருத்து தெரிவித்தது. தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்துவிடுங்கள் என்று மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கூறியது.  இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

  அப்போது ஏற்கனவே உத்தரவிட்டபடி, தாஜ்மகால் பாதுகாப்பு தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்யாததை நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

  தாஜ்மகால் பாதுகாப்புக்கு பொறுப்பான தொல்லியல் ஆய்வு அமைப்பு, இந்த விஷயத்தில் ஆலோசிக்கப்படாதது கண்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

  அப்போது அட்டார்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வக்கீல்) கே.கே. வேணுகோபாலிடம் நீதிபதிகள், “யுனஸ்கோவின் உலக பாரம்பரிய மையம் பாரீசில் இருக்கிறது. தாஜ்மகால் பாதுகாப்பு நிர்வாக திட்டத்தை அங்கு தாக்கல் செய்கிறீர்களா? இதை நீங்கள் தாக்கல் செய்யவில்லை. தாஜ்மகால் உலக பாரம்பரிய சின்னம் என்று அளித்து உள்ள அங்கீகாரத்தை யுனஸ்கோ திரும்பப்பெற்று விட்டால் என்ன செய்வீர்கள்?”என காட்டமாக கேட்டனர்.

  மேலும் தாஜ்மகால் பராமரிப்பு, பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்பது குறித்து அட்டார்னி ஜெனரல் 30-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #TajMahal #SupremeCourt #Tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்தல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சிகள் மதத்தை பயன்படுத்துவதை தடுக்க உத்தர விடகோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. #SupremCourt #Religion
  புதுடெல்லி:

  சுப்ரீம் கோர்ட்டு வக்கீலும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான அஸ்வினி உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

  அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

  தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காக மதத்தை தவறாக பயன்படுத்துகின்றன. இதேபோல் வேட்பாளர்களும் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்த போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் மதசார்பின்மை, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு பாதிக்கப்படுகிறது. மேலும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாக நடைபெறுவதையும் இது பாதிக்கிறது.

  இது தொடர்பான திருத்த மசோதா கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 1996-ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்த மசோதா காலாவதியாகி விட்டது. ஆனால் அதன்பிறகு அந்த மசோதாவை கொண்டு வர தேர்தல் கமிஷன் யோசனை தெரிவித்த போதிலும், அரசாங்கத்தின் தரப்பில் அதுதொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

  எனவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், வேட்பாளர்களும் மதத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிடவேண்டும்.

  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

  இந்த மனு அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.  #SupremCourt #Religion #Tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முஷரப், சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அளித்த அனுமதியை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிரடியாக திரும்பப் பெற்றனர். #Pakistan #PervezMusharraf
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் சிகிச்சை பெறுவதற்காக செல்வதாக கூறி துபாய் போனார். ஆனால் அவர் அங்கு இருந்து இன்னும் திரும்பவில்லை.

  ஆனால் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பினார். அவர் சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு, நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியது.

  அந்த நிபந்தனையின்படி அவர் தன்மீது உள்ள வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்கு லாகூர் கோர்ட்டில் கடந்த 13-ந் தேதி ஆஜராக தவறினார்.

  இதற்கு இடையே தன் மீதான தகுதி நீக்க வழக்கில் பெஷாவர் ஐகோர்ட்டு 2013-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நேற்று 2 மணிக்குள் அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக நீதிபதிகள் கெடு விதித்தனர். ஆனால் அதன்படி அவர் ஆஜராகவில்லை.

  ஆனால் அவரது வக்கீல் கமர் அப்சல், முஷரப் நாடு திரும்ப கூடுதல் அவகாசம் கோரினார். அதைத் தொடர்ந்து அந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

  அதே நேரம் முஷரப், சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அளித்த அனுமதியை நீதிபதிகள் அதிரடியாக திரும்பப் பெற்றனர். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முஷரப்பின் கனவு பலிக்காமல் போய் விடும் சூழல் உருவாகி உள்ளது.  #Pakistan #PervezMusharraf  #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க. வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். #ThoothukudiShooting #CBIReport
  புதுடெல்லி:

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க. வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார்.  #ThoothukudiShooting #CBIReport

  சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க.வை சேர்ந்த வக்கீல் ஜி.எஸ்.மணி நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சாதாரண சம்பவம் என்று கருதமுடியாது. மிகவும் தீவிரத்தன்மை கொண்ட அரிதிலும் அரிதான கொடுமையான சம்பவம்.

  இந்த கொலைத்தாக்குதலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளும் அன்று பொறுப்பில் இருந்த கலெக்டரும், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள். தங்கள் துறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு போலீசார் நேர்மையான, சுதந்திரமான விசாரணையை நடத்த முடியாது.

  எந்த ஒரு சம்பவத்தின் மீதும் நேர்மையான, சுதந்திரமான விசாரணை என்பது அரசியல் சட்டத்தில் குடிமக்களுக்கு உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையாகும். எனவே, சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிட்டு தூத்துக்குடி தாக்குதல் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

  இந்த விசாரணை கோர்ட்டு மேற்பார்வையில் நடத்தப்பட்டு இதுகுறித்த விரிவான அறிக்கையை கோர்ட்டுக்கு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

  அதேபோல தகவல் உரிமை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்டர்நெட் வசதியை ரத்துசெய்துள்ள தமிழக அரசின் உத்தரவு அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்.

  எனவே இந்த 3 மாவட்டங்களில் இன்டர்நெட் வசதியை நிறுத்திவைத்துள்ள தமிழக அரசின் ஆணையை உடனடியாக ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும்.

  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்ஜாமீன் தொடர்பாக முரண்பட்ட தீர்ப்புகள் வந்து உள்ள நிலையில், இது தொடர்பான விசாரணையை அரசியல் சாசன அமர்வு அமைத்து விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SupremCourt #Bail
  புதுடெல்லி:

  குற்ற வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் அவருக்கு செசன்ஸ் கோர்ட்டு, ஐகோர்ட்டு முன் ஜாமீன் வழங்குகின்றன.

  இந்த முன் ஜாமீன் என்பது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகள், ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன.

  முன்ஜாமீன் என்பது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இருக்கக்கூடாது, வழக்கு விசாரணை முடிகிறவரையில் நீடிக்க வேண்டும் என்று சில தீர்ப்புகள் சொல்கின்றன.

  இன்னும் சில தீர்ப்புகள், முன் ஜாமீன் என்பது குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்தான் வழங்கப்பட வேண்டும், அதன்பின் சம்பந்தப்பட்ட நபர், கோர்ட்டில் சரண் அடைந்து முறையான ஜாமீன் பெற வேண்டும் என்று கூறுகின்றன.

  இந்த நிலையில் முன் ஜாமீன் தொடர்பான ஒரு வழக்கை நீதிபதிகள் குரியன் ஜோசப், மோகன் சாந்தன கவுடர், நவீன் சின்கா ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது.

  அப்போது முன்ஜாமீன் தொடர்பாக முரண்பட்ட தீர்ப்புகள் வந்து உள்ள நிலையில், இது தொடர்பான விசாரணையை அரசியல் சாசன அமர்வு அமைத்து விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ குறித்து பதில் மனு தாக்கல் செய்யாத யாகூ, முகநூல் வலைத்தளங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Google #Facebook #Fine
  புதுடெல்லி:

  சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ குறித்து ஐதராபாத்தை சேர்ந்த பிரஜாவாலா என்ற தொண்டு நிறுவனம் 2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவுக்கு 2 வீடியோ ஆதாரங்களுடன் ஒரு கடிதம் எழுதியது. அதில் ஆபாச வீடியோ காட்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த வழக்கு கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது அனைத்து சமூக வலைத்தளங்களும் தாங்கள் இதுபற்றி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த பதிலை அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் முக்கிய வலைத்தளங்கள் இதுபற்றி எந்த பதில் மனுவையும் நேற்று தாக்கல் செய்யவில்லை.

  இதையடுத்து நீதிபதிகள் அமர்வு சமூக வலைத்தளங்கள் பதில் மனுதாக்கல் செய்யாததை சுட்டிக் காண்பித்து யாகூ, முகநூல் (பேஸ்புக்) இந்தியா, முகநூல் அயர்லாந்து, கூகுள் இந்தியா, கூகுள், மைக்ரோ சாப்ட் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.  #Google #Facebook #Fine 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கவர்னர் கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏ.வை நியமிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) மனு தாக்கல் செய்தன. #KarnatakaCMRace #AngloIndianMLA
  புதுடெல்லி:

  கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இணைந்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்தன. அதில், பா.ஜனதா கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கவர்னர் வஜூபாய் வாலா கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏ.வை நியமிக்கக்கூடாது.  இது சட்டமன்றத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் சட்டவிரோத முயற்சி. இது நியாயமற்றதும், ஜனநாயக நடைமுறையை கேலிக்கூத்தாக்குவதும் ஆகும் என்று கூறப்பட்டு இருந்தது.

  இந்த கட்சிகள் ஏற்கனவே எடியூரப்பா முதல்-மந்திரி பதவி ஏற்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. முன்னதாக காலையில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்க மறுத்துவிட்டது. #KarnatakaCMRace #AngloIndianMLA
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சம்மதத்துடன் ஈடுபடும் ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதக்கூடாது என ஐ.ஐ.டி. மாணவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தனர். #IITStudent #SupremCourt
  புதுடெல்லி:

  இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு இயற்கைக்கு மாறாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது. மேலும் ஓரினச் சேர்க்கை சட்டப்படி கிரிமினல் குற்றம் என்பதை சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு உறுதி செய்துள்ளது.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஐ.டி. மாணவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தனர். அதில், ஒருவரின் சம்மதத்துடன் ஈடுபடும் ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றமாக்கி இருப்பது இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவ உரிமை, கண்ணியம், சுதந்திரம், உணர்வு வெளிப்பாடு ஆகியவற்றுக்கு தடை போடுவதாக உள்ளது. எனவே இதை குற்றச் செயலாக்கி இருப்பதை தடை செய்யவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

  இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற ஒரு மனுவை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.  #IITStudent #SupremCourt
  ×