சூர்யா நடிக்கும் புதிய படம்- இயக்குனர் இவரா?

சூர்யாவுக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.பக்கா கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறதாம்.
சூர்யா நடிக்கும் புதிய படம்- இயக்குனர் இவரா?
Published on

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

ஜீத்து மாதவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் சூர்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த 2 படங்களை தொடர்ந்து 'டிராகன்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இது ரஜினிக்கு சொன்ன கதை என்றும், அந்த கதையை தற்போது சூர்யாவுக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அஷ்வத் மாரிமுத்து தற்போது சிம்புவை வைத்து 'காட் ஆப் லவ்' படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் சூர்யாவுடன் கைகோர்பார் என்று தெரியவருகிறது. இது பக்கா கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறதாம். 

X

Maalai Malar
www.maalaimalar.com