என் மலர்
நீங்கள் தேடியது "சங்கராந்தி பண்டிகை"
- உணவு அடுக்கி வைத்து இருந்த அறையில் கண்ணை கட்டிய துணியை அவிழ்த்து விட்டனர்.
- பல்வேறு இடங்களில் புதுமாப்பிள்ளைகளுக்கு 100-க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சிப்பட்டினம், சாந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மனைவி கலாவதி. இவர்களின் மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
மருமகனுக்கு பல்வேறு வகையான உணவுகளை சமைத்து பரிமாற கலாவதி முடிவு செய்தார். அதன்படி நேற்று ஆடு, கோழி, முட்டை, மீன்கள், இனிப்பு வகைகள், கார வகைகள் என 290 வகையான உணவுகளை சமைத்து அறை முழுவதும் பரப்பி வைத்திருந்தனர். மருமகனுக்கு பிரமிப்பு ஏற்படுத்துவதற்காக அவரது கண்ணை துணியில் கட்டி அழைத்து வந்தனர்.
உணவு அடுக்கி வைத்து இருந்த அறையில் கண்ணை கட்டிய துணியை அவிழ்த்து விட்டனர். 290 வகையான உணவு வகைகளை கண்ட மருமகன் என்ன செய்வது என்று தெரியாமல் அசந்து போனார். இதேபோல் பல்வேறு இடங்களில் புதுமாப்பிள்ளைகளுக்கு 100-க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.
- கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.
- திருமணத்திற்கு பிறகு மல்லிகார்ஜுன் சங்கராந்தி பண்டிகைக்காக மாமியார் வீட்டிற்கு வந்தார்.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சங்கராந்தி பண்டிகையையொட்டி புதுமண தம்பதிக்கு விருந்து வைப்பது பாரம்பரியமாக உள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், சரூர் நகர் அடுத்த சாரதா நகரை சேர்ந்தவர் கல்பனா. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை ஆந்திரா மாநிலம், காக்கி நாடாவை சேர்ந்த மல்லிகார்ஜூன் என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.
திருமணத்திற்கு பிறகு மல்லிகார்ஜுன் சங்கராந்தி பண்டிகைக்காக மாமியார் வீட்டிற்கு வந்தார். மருமகனுக்கு மட்டன், சிக்கன், மீன் என பலவிதமான உணவு வகைகள் மற்றும் இனிப்பு வகைகள் என 130 வகையான உணவுகளை கல்பனா சமைத்து பரிமாறினார்.
இதனைக் கண்ட புதுமாப்பிள்ளை மல்லிகார்ஜுன், அவரது குடும்பத்தினர் ஊர் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.






