என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய் கொடுத்த ரூ. 20 லட்சம்... மருமகனின் செயலால் கதறி அழும் மாமியார்  - காரணம் இதுதான்!
    X

    விஜய் கொடுத்த ரூ. 20 லட்சம்... மருமகனின் செயலால் கதறி அழும் மாமியார் - காரணம் இதுதான்!

    • விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், விஜய் கொடுத்த ரூ. 20 லட்சத்தை தனது மருமகன் வீணாக்கி வருவதாக மாமியார் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "3 ஆண்டுகளுக்கு முன்பு எனது மக்களுக்கு திருமணம் நடைபெற்றது. அவளுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான ஒரு வருடத்திலேயே எனது மகள் கணவனுடன் வாழாமல் என வீட்டிற்கு வந்துவிட்டாள். இப்போது விஜய் கூட்டத்தில் என் மகள் உயிரிழந்தார். அப்போது கூட என் மகளின் சடலத்தை பார்க்க வராத என் மருமகன், இழப்பீடு பணம் அறிவித்தவுடன் மருத்துவமனையில் வந்து சண்டையிட்டு சடலத்தை வாங்கி அடக்கம் செய்ததோடு மகளையும் தன்னோடு அழைத்து சென்றார்.

    இப்போது ரூ.20 லட்சம் பணம் வாங்கியவுடன் வேறு மாதிரி நடந்து கொள்கிரார். ஆகையால் என் மகளின் இறப்பிற்கு கிடைத்த இழப்பீட்டு பணத்தை என் மகளின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும். அதற்கு அவரையும் என்னையும் நாமினியாக நியமிக்க வேண்டும். அப்போது தான் என் பேத்தியின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். அனால் அந்த பணத்தை என் விருப்பப்படி தான் செலவு செய்வேன் என்று எகத்தாளமாக பேசுகிறார்" என்று அழுதபடியே தெரிவித்தார்.

    Next Story
    ×