என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய்யை காண காலை முதல் காத்திருக்கும் தொண்டர்கள்- 50 பேர் மயக்கம்
    X

    விஜய்யை காண காலை முதல் காத்திருக்கும் தொண்டர்கள்- 50 பேர் மயக்கம்

    • தொண்டர்களின் வெள்ளத்தில் நீந்தி மெதுவாக வந்ததால் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
    • த.வெ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு அம்புலன்ஸில் முதலுதவி.

    திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் பரப்புரை மேற்கொண்ட த.வெ.க. தலைவர் விஜய்யை காண்பதற்காக பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மரக்கடை பகுதியில் குவிந்தனர்.

    காலை 9.40 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த விஜய் 10.35 மணிக்கெல்லாம் தனது பரப்புரையை தொடங்கி விடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தொண்டர்களின் வெள்ளத்தில் நீந்தி மெதுவாக வந்ததால் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அப்போது, விஜய்யின் வருகைக்காக காத்திருந்த தொண்டர்களில் 50க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர்.

    வெளியின் தாக்கம் மற்றும் உணவு, தண்ணீர் இன்றி தொண்டர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுகின்றனர்.

    மயக்கம் அடைந்தவர்களுக்கு த.வெ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு அம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், தேர்தல் பரப்புரைக்காக திருச்சிக்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய்யை காண பெரும் கூட்டம் கூடியதால் திருச்சியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    குறிப்பாக, விமானம் நிலையம் தொடங்கி டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் என திருச்சியின் முக்கிய சாலைகள் முழுவதும் பல கிலோ மீட்டருக்கு த.வெ.க. தொண்டர்களின் வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் விமான நிலையம், ரெயில் நிலையம் செல்வோர் உரிய நேரத்திற்கு செல்ல முடியமால் தவித்தனர்.

    Next Story
    ×