என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் த.வெ.க. தலைவர் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார்.
- ஒரு மாத காலத்திற்கு பிறகு, விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
ஆனால், கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் பிரசாரம் மேற்கொள்ள விஜய் தொடர்ந்து பல சவால்களை சந்தித்து வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார். பின்னர், ஒரு மாத காலத்திற்கு பிறகு, விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் வரும் டிச.5ம் தேதி விஜயின் ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, தவெகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.






