என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.வெ.க..! தனது புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் மல்லை சத்யா
- ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியுடன் இணைந்துள்ளனர்.
- கடந்த நவம்பர் 20ம் தேதி அன்று மல்லை சத்யா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலர் பதவியில் இருந்தும் அக்கட்சியில் இருந்தும் மல்லை சத்யா நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய கட்சியின் பெயர் நவ.20-ந்தேதி அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
அதன்படி, சென்னை அடையாறில் நடந்த கூட்டத்தில் மல்லை சத்யா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். அவர் 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார்.
ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியுடன் இணைந்துள்ளனர்.
தி.மு.க.வில் அங்கம் வகித்த வைகோ, கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி ம.தி.மு.க. என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதே போன்று ம.தி.மு.க.வில் அங்கம் வகித்த மல்லை சத்யா துரை வைகோவுடனான மோதல் போக்கு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில், திராவிட வெற்றி கழகம் கட்சியை தேர்தல் ஆணையத்தில் மல்லை சத்யா பதிவு செய்துள்ளார்.
வழக்கறிஞர் மயில்சாமி மூலம் தனது கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தார்.







