என் மலர்
நீங்கள் தேடியது "WEBSITE DOWNLOAD"
- தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- வாக்காளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விவரங்களை அறிந்து கொள்ள அணுகியதால் முடங்கியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கம் முடங்கியது. வாக்காளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விவரங்களை அறிந்து கொள்ள அணுகியதால் முடங்கியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கம் முடங்கியதால் வாக்காளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். ஒரு நாள் காத்திருந்து நாளை முதல் எளிதாக அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் நியாய விலைக்கடையில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் அனைத்து மூல சான்றிதழ்களையும் அவற்றின் 2 ஜெராக்ஸ் நகல்களில் சுய சான்றிடப்பட்டு கொண்டு வரப்பட வேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பெரம்பலூர் மாவடத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள் மற்றும் 2 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணபங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டுள்ளது.
இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலும் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 27-ந்தேதி அன்றும் பெரம்பலூர் துறையூர் சலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி (தமிழ் வழிக் கல்வி) வளாகத்தில் நடைபெற உள்ளது.
மேற்படி, நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டு 3.12.2022 முதல் பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தின் வழி (www.drbpblr.net/hallticket.php) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நேர்முக அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேர்முகத்தேர்விற்கான அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர் கொண்டு வந்தால் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், நேர்முக தேர்விற்கு வரும்பொழுது விண்ணதாரர் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்துள்ள அதே புகைபடத்தின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் அனைத்து மூல சான்றிதழ்களையும் அவற்றின் 2 ஜெராக்ஸ் நகல்களில் சுய சான்றிடப்பட்டு கொண்டு வரப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி பெற்ற விண்ணபதாரர்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவின் தொலைபேசி எண். 04328-296140 மற்றும் drbpblr2022@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






