search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Application Form"

    • பெரம்பலூர் மாவட்டத்தில் நியாய விலைக்கடையில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்
    • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் அனைத்து மூல சான்றிதழ்களையும் அவற்றின் 2 ஜெராக்ஸ் நகல்களில் சுய சான்றிடப்பட்டு கொண்டு வரப்பட வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பெரம்பலூர் மாவடத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள் மற்றும் 2 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணபங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டுள்ளது.

    இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலும் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 27-ந்தேதி அன்றும் பெரம்பலூர் துறையூர் சலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி (தமிழ் வழிக் கல்வி) வளாகத்தில் நடைபெற உள்ளது.

    மேற்படி, நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டு 3.12.2022 முதல் பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தின் வழி (www.drbpblr.net/hallticket.php) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    நேர்முக அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேர்முகத்தேர்விற்கான அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர் கொண்டு வந்தால் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும், நேர்முக தேர்விற்கு வரும்பொழுது விண்ணதாரர் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்துள்ள அதே புகைபடத்தின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் அனைத்து மூல சான்றிதழ்களையும் அவற்றின் 2 ஜெராக்ஸ் நகல்களில் சுய சான்றிடப்பட்டு கொண்டு வரப்பட வேண்டும்.

    விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி பெற்ற விண்ணபதாரர்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவின் தொலைபேசி எண். 04328-296140 மற்றும் drbpblr2022@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
    • போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவம், போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் விதிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பெற்ற 18.7.1967ம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    இதையடுத்து தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போ ட்டிகள் நடத்த அரசு அறிவித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் ராமநாதபுரம், சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

    மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். 10 தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவம், போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் விதிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் மொபைல் போன் வாயிலாகவோ (99522 80798) நேரிலோ அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×