என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல்காந்தி
- திருமாவளவனுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- அனைவரும் கண்ணியம், சம உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்போம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில்,விசிக தலைவர் திருமாவளவனுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைவரும் கண்ணியம், சம உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புக்காக நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்போம்" என்று தெரிவித்துள்ளார்.
Next Story






