என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.
பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
- எஸ்.பி.ஐ வங்கி கிளை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். பல்லடத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.பி.ஐ.வங்கி மற்றும் எல்.ஐ.சி சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார தலைவர் கணேசன், காங்கிரஸ் நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, மணிராஜ், முருகன்,வேலுசாமி, நரேஷ், ராமசந்திரன், சாகுல், தமிழ்செல்வி,லாவண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






