search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும்;  காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்
    X

    பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்

    • பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் பேட்டியளித்தார்.
    • கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    தேவேந்திர குல வேளாளர் மக்கள் 99 சதவீதம் பேர் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற விரும்புகின்றனர். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் பட்டியல் இனத்திலிருந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு சலுகைகள் வேண்டாம், மரியாதை கிடைத்தால் போதும். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயகம் தோல்வியடைந்து, பண நாயகம் வெற்றி பெற்றுள்ளது.

    மக்களை அடைத்து வைத்து மது, பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு ஜனநாயக படு கொலை செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2026-ல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் வாக்குகள் இல்லை. திமுக, காங்கிரசை தூக்கிப்பிடித்து திரிகிறது.

    வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கட்சி காணாமல் போகும். எல்லாவற்றிலும் ராமநாதபுரம் மாவட்டத்தை ஒதுக்குகின்றனர். இங்குள்ள மக்கள் காட்டுக்கருவேல மரம் வெட்டி கரிமூட்டம் போட்டுத்தான் பிழைப்பு நடத்துகின்றனர். தமிழக த்தில் தி.மு.க. அரசால் நல்லதும் நடக்கவில்லை, கெட்டதும் நடக்கவில்லை.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் குடி யிருப்பு பகுதியில் குடி நீரில் மலக்கழிவுகளை கலந்தவர்கள் யார் என்று அரசுக்கு தெரிந்தும் இதுவரை உண்மை குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

    ஓட்டு வங்கி அரசிய லுக்காக தி.மு.க. அரசு இப்படி செயல்படுகிறது. ராமநாதபுரம் நகராட்சி இந்திரா நகர் பகுதியில் 800 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு நகராட்சி மின் மயானம் அமைக்க முயற்சிக்கிறது. இதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் த.ம.மு.க. சார்பில் பெரிய போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் சேகர், கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×