search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flag hoisting ceremony"

    • அனைத்து வார்டுகளிலும் அ.தி.மு.க. கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது.
    • அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க.வின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள 16 கால் மண்டபம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ படத்திற்கு நாளை காலை 10 மணியளவில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட உள்ளது.

    அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கொடி கம்பம் கொடியேற்று நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதே போல மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், கிழக்கு தொகுதி, மேலூர் தொகுதி அனைத்து கழகங்க ளிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டு பகுதிகளிலும் அ.தி.மு.க.வின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது,

    இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெய லலிதா பேரவை, இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, வர்த்தக அணி, மீனவர் அணி, விவசாய பிரிவு, வழக்கறிஞர் பிரிவு, அண்ணா தொழிற்சங்கம், சாரா ஓட்டுனர் அணி, சிறுபான்மை பிரிவு, மருத்துவ அணி, கலைப்பிரிவு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் முன்னாள் இந்நாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
    • இதற்கான ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் அர்ஜுன் செய்திருந்தார்.

    உடுமலை

    உடுமலை நகராட்சி 3-வது வார்டில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடந்தது. அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட திமுக., செயலாளர் இல. பத்மநாபன், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ,உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி, நகர் மன்ற தலைவர் மத்தீன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., பொருளாளர் முபாரக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம்பிரசாத், தலைமை பொதுக்குழு உறுப்பினர் யுஎன்பி., குமார் ,துணை தலைவர் கலைராஜன் ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் அர்ஜுன் செய்திருந்தார்.

    • மக்கள் நீதிமய்யம் கட்சியின் தொழிற்சங்க கொடியேற்று விழா நடந்தது.
    • மண்டல செயலாளர் வழக்கறிஞர் அழகர், கொடியற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    மதுரை

    உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தொழிற்சங்க பேரவை சார்பில் மதுரை பெத்தானியாபுரத்தில் பொதுமக்களுக்கு படிப்பகம் மற்றும் தொழிற்சங்க கொடி ஏற்றி பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மண்டல செயலாளர் வழக்கறிஞர் அழகர், கொடியற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சொக்கர், பேரவை மண்டல அமைப்பாளர் சரவணன், 62-வது வட்டச் செயலாளர் ஆரான் ஆகியோர் செய்திருந்தனர்.

    மாவட்டச் செயலாளர்கள் முனியசாமி, மணி, பிச்சைமணி தொழிலாளர் அணி மண்டல அமைப் பாளர்-தொழிலாளர்கள் அணி மாவட்ட அமைப் பாளர்கள் பாண்டியன், மயில்ராஜ், ரமேஷ் மற்றும் அணியின் மண்டல அமைப் பாளர்கள் செல்லப்பாண்டி, சிவபாலகுரு, கிருஷ்ண குமார், பத்மா, ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மின் அமைப்பாளர்கள் சங்க கொடியேற்று விழா நடந்தது.
    • செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் மின்சார அலுவலகம் முன்பு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க அலங்காநல்லூர் கிளை சார்பில் தொழிலாளர் தினத்தையொட்டி கொடியேற்று விழா நடந்தது.

    தலைவர் ரவி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர்கள் அலிமுதின், சுப்பாரயலு, செயலாளர் வெள்ளைகங்கை, பொருளாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர். கவுரவ ஆலோசகர் விநாயக ராஜா வரவேற்றார்.

    அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து சங்கத்தின் பெயர் பலகை திறக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், சத்தியசீலன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • தி.மு.க. சார்பில் மே தின விழா நடந்தது.
    • தொழிற்சங்க சட்ட ஆலோசகர் தங்கசாமி முன்னிலை வகித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளம் தனியார் ஆலை முன்பு தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடந்தது. மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். தொழிற்சங்க சட்ட ஆலோசகர் தங்கசாமி முன்னிலை வகித்தார். தலைவர் லட்சுமணன், செயலாளர் கொடி. சந்திரசேகரன், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் வரவேற்றனர் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், ஒன்றிய செயலாளர்கள் தங்கப்பாண்டி, முத்துராமன், நிர்வாகிகள் சின்னசாமி, செல்வம், திருக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்தாபன தினநிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடியில் கட்சி கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஸ்பா கலந்து கொண்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினம் கொண்டாடப்பட்டது. தெற்கு,மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் ஸ்தாபன தினநிகழ்ச்சியை முன்னிட்டு கட்சி கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமை தாஙகினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் எம்.பி. சசிகலா புஸ்பா கலந்து கொண்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் தங்கம், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை தலைவர் சின்னத்தம்பி, தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் சங்கர், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் செல்வகணி, வடக்கு மண்டல தலைவர் சிவராம், மாவட்ட துணை தலைவர் கனி மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநகர தெற்கு மண்டல் பா.ஜ.க. சார்பாக முத்தையாபுரம் தோப்பு மாணிக்க விநாயகர் தெரு, பேரின்பநகர் ஆகிய 2 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி ஸ்தாபன தினத்தை முன்னிட்டு பா.ஜ.க. கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    இதில் மாவட்ட பொதுச்செ யலாளர் உமரி சத்தியசீலன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி சிறப்புரையாற்றி இனிப்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தெற்கு மண்டல் தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம், வர்த்தகபிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம், விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம் வரவேற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராம், மகளிர் அணி மண்டல தலைவி செல்வி, பொருளாதாரப் பிரிவு மண்டல தலைவர் முருகேசன், தொழில் பிரிவு மண்டல தலைவர் சங்கர், கணேஷ், தெற்கு மண்டல் செயலாளர் செல்வம் மற்றும் மகளிர் அணி லட்சுமி சிலம்பொழி, கிளை தலைவர்கள் சண்முகநாதன், உலகநாதன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

    • மதுரை வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பு மூவேந்தர் முன்னேற்ற கழக கொடியேற்று விழா நடந்தது.
    • மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பு மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தந்தை மாரியப்ப வாண்டையாரின் நினைவு தினம் மற்றும் பி.கே.மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் நாகராஜன், மாநில இணை தலைவர் ஆறுமுக நாட்டார், மாவட்ட தலைவர் கணேசன் முன்னிலை வகித்துனர்.

    மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன் வரவேற்றார். தென் மண்டல தலைவர் குஷி செந்தில் கொடியேற்றினார். மறத்தமிழர் சேனை மாநில துணை பொதுச்செயலாளர் ஆதி முத்துக்குமார், மாவட்ட செயலாளர் மருதுபாண்டி, நிர்வாகிகள் வையாபுரி, கருப்பையா, முத்துமணி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி நன்றி கூறினார்.

    • கட்சி கொடியேற்றி, தமிழைத்தேடி பிரசார பயணம் குறித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
    • இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அரவேணு

    பாட்டாளி மக்கள் கட்சியின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியம் சார்பில் கட்சி கொடியேற்றம் நடைபெற்றது. விழாவுக்கு கோத்தகிரி ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். விழாவில் கட்சி கொடியேற்றி, தமிழைத்தேடி பிரசார பயணம் குறித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்ட துணைச் செயலாளர் ராஜகோபால், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜான் லியோ, மாவட்ட தலைவர் அம்சா, அமைப்பின் தலைவர் ஜெகதீஷ் சேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி மாவட்ட செயலாளர் குணசேகரன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டனர். இதில் கோத்தகிரி ஒன்றிய நிர்வாகிகள் யுவராஜ், ரமேஷ், கணபதி, மணிகண்டன், குணா மகேந்திரன், சிவா மற்றும் மகளிர் அணி சுதா, கோமதி விஜயா, ராஜேஸ்வரி, பரிமளா, கலா, சுகன்யா, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்

    • ஜெயங்கொண்டத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது
    • மாநில செயலாளர் ராஜேந்திரன் சிஐடியு கல்வெட்டினை திறந்து வைத்தார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்வாரிய முன்பு கோட்ட ஊழியர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் கோட்ட மத்திய மின் ஊழியர்கள் (சிஐடியு) சங்க சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் கோட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ராஜேந்திரன் சிஐடியு கல்வெட்டினை திறந்து வைத்தார். மாநில செயலாளர் அகஸ்டின் சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வட்ட பொருளாளர் கண்ணன், கோட்ட செயலாளர் கண்ணன், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது.
    • விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கி நகர் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றினார்.

    காரைக்குடி

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138-வது தொடக்க விழா மற்றும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண விழாவினை முன்னிட்டு காரைக்குடி நகரில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது. விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கி நகர் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் ரத்தினம், அமுதா, அஞ்சலிதேவி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி, நகரச் செயலாளர் குமரேசன், வக்கீல் ராமநாதன், வர்த்தக காங்கிரஸ் நகர தலைவர் ஜெயபிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அருணா, பாலா, சிவா, அழகேஷ், முத்து, மணி, புதுவயல் முகம்மது மீரா, கண்டனூர் குமார் மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் நாச்சம்மை, விஜி, சூர்யா, பிரதீக்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.திருப்பூர் தெற்கு பகுதி செயலாளர் கே.குமார் வரவேற்று பேசினார்.
    • மாநில சிறுபான்மைச் செயலாளர் டாக்டர் பி.சௌகத் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக கொடியேற்றும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் ஜி.கே.டி.எஸ். குணசேகரன் தலைமை தாங்கினார். அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.திருப்பூர் தெற்கு பகுதி செயலாளர் கே.குமார் வரவேற்று பேசினார்.

    திருப்பூர் தெற்கு பகுதி துணைச் செயலாளர் என்.ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் தெற்கு பகுதி துணைச் செயலாளர் ஒருங்கிணைப்பாளர் எஸ். சதீஷ்குமார், அமைப்பாளர் பி.யுவராஜ் பங்கேற்றனர்.மேலும் மாநில கழக பொருளாளர் டாக்டர் தினேஷ்குமார் கழகத்தின் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.

    மாநில சிறுபான்மைச் செயலாளர் டாக்டர் பி.சௌகத் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் தெற்கு தொகுதியை சேர்ந்த இளைஞரணி வீருசின்னா மற்றும் இளைஞர்களும், மகளிர் அணி சாந்தி, தங்கமணி மற்றும் மகளிர் அணியினரும், துணைச் செயலாளர்கள் நாகராஜ், ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் பானுமதி நன்றி கூறினார். 

    • 63வேலம்பாளையம் நால்ரோடு ஆகிய பகுதிகளில் அ.ம.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது.
    • கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தலைமை தாங்கி கொடியேற்றினார்

    மங்கலம் :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் கிழக்கு ஒன்றியம் சார்பில் பல்லடம் ஒன்றியம் 63 வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மூணுமடை, 63வேலம்பாளையம் நால்ரோடு ஆகிய பகுதிகளில் அ.ம.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கி கொடியேற்றினார்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார், 63வேலம்பாளையம் ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 63வேலம்பாளையம் கிளைசெயலாளர் சிவசுப்பிரமணி, கிழக்கு அண்ணாநகர் கிளை செயலாளர் சுரேஷ், பல்லடம் கிழக்கு ஒன்றிய விவசாய அணி ரவிசந்திரன் , மாணிக்காபுரம் ஊராட்சி செயலாளர் பூபதி மற்றும் கிளைச்செயலாளர்களான முருகன்,பிரகாஷ்,வலையபாளையம் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×