கோத்தகிரியில் கொடியேற்று விழா

கட்சி கொடியேற்றி, தமிழைத்தேடி பிரசார பயணம் குறித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோத்தகிரியில் கொடியேற்று விழா
Published on

அரவேணு

பாட்டாளி மக்கள் கட்சியின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியம் சார்பில் கட்சி கொடியேற்றம் நடைபெற்றது. விழாவுக்கு கோத்தகிரி ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். விழாவில் கட்சி கொடியேற்றி, தமிழைத்தேடி பிரசார பயணம் குறித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட துணைச் செயலாளர் ராஜகோபால், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜான் லியோ, மாவட்ட தலைவர் அம்சா, அமைப்பின் தலைவர் ஜெகதீஷ் சேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி மாவட்ட செயலாளர் குணசேகரன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டனர். இதில் கோத்தகிரி ஒன்றிய நிர்வாகிகள் யுவராஜ், ரமேஷ், கணபதி, மணிகண்டன், குணா மகேந்திரன், சிவா மற்றும் மகளிர் அணி சுதா, கோமதி விஜயா, ராஜேஸ்வரி, பரிமளா, கலா, சுகன்யா, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்

X

Maalai Malar
www.maalaimalar.com