என் மலர்
நீங்கள் தேடியது "rajasthan assembly election"
5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த மத்திய பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் அரசு விவசாய கடன்களை ரத்து செய்தன.
மத்தியபிரதேசத்தில் விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வரையிலான கடனையும், சத்தீஸ்கரில் ரூ.6,100 கோடி வரையிலான விவசாய கடனையும் ரத்து செய்து அம்மாநில புதிய முதல்-மந்திரிகள் கமல்நாத், பூபேஷ் பாதேல் ஆகியோர் பதவி ஏற்றவுடன் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் ராஜஸ்தானிலும் விவசாய கடனை தள்ளுபடி செய்து காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
அதன்படி பதவியேற்ற 2 தினத்தில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து அம்மாநில புதிய முதல்-மந்திரியான அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் ரத்தாகி உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் மாநிலங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது சிறப்பானது. நாங்கள் 10 நாட்கள் கேட்டோம். ஆனால் 2 நாட்களிலேயே செய்து முடித்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரசுக்கு போட்டியாக அசாமில் ரூ.600 கோடி விவசாய கடனும், குஜராத்தில் ரூ.625 கோடி மின் கட்டணமும் தள்ளுபடி செய்து அம்மாநில பா.ஜனதா அரசுகள் உத்தரவிட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi #Congress
5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.
இதையடுத்து 3 மாநிலங்களிலும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது.
ராஜஸ்தானில் முதல்- மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது. திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதனால் கமல்நாத் - ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே போட்டி நிலவுகிறது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் பிரபலமான காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லாததால் எம்.பி.யான தாம்ரத்வாஜ் தேர்தலில் களம் இறக்கப்பட்டார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ்பாகேல், மூத்த தலைவர் டி.எஸ்.சிங்தேவ் பெயர்களும் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளது.
நேற்று 3 மாநிலங்களிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அந்தந்த மாநில தலைநகரங்களில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியால் நியமிக்கப்பட்ட மேலிட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்- மந்திரியை ஒருமனதாக தேர்வு செய்ய முடியாததால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் அதிகாரம் ராகுல் காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறார்கள். இதை ராகுல்காந்தி 3 மாநில முதல்- மந்திரியை தேர்வு செய்வதற்கு பயன்படுத்துகிறார்.
இந்த ‘ஆப்’க்குள் சென்றதும் முதலில் ராகுல்காந்தி உரை இடம் பெறுகிறது. அவர் முதல்-மந்திரியாக யாரை தேர்வு செய்யலாம் என்று தொண்டர்களிடம் கருத்து கூறுமாறு வேண்டுகோள் விடுத்து பேசுகிறார்.
யாரை தொண்டர்கள் விரும்புகிறார்களோ அவரது பெயரை ‘டிக்’ செய்தால் போதும். இதில் மெஜாரிட்டி அடிப்படையில் முதல்- மந்திரி தேர்வு செய்யப்படுவார். முடிவை ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகி விரைவில் முதல்-மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் முதல்- மந்திரி தேர்வில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், ராஜஸ்தானில் மட்டும் போட்டி நிலவுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் முதல்- மந்திரியாக தேர்வு செய்யப்படுகிறார். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு துணை முதல்- மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று முடிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் முதல்- மந்திரியை தேர்வு செய்வது தொடர்பாக நேற்று ஜெய்ப்பூரில் எம்.எல்.ஏ.க்களுடன் 6 மணி நேரம் ஆலோசனை நீடித்தது. இதில் இறுதி முடிவு எட்டப்படாததால் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோரை டெல்லி வருமாறு மேலிடம் அழைத்தது. அதை ஏற்று இருவரும் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
இருவரும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியதாகவும் இதில் முடிவு எட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தெரிவித்தனர். #RahulGandhi #congress
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது.
முதலில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு கடந்த மாதம் 12, 20-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. சராசரியாக 74 சதவீதம் வாக்குகள் பதிவானது.
மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மிசோரம் மாநிலத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதைத் தொடர்ந்து ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் 74 சதவீத வாக்குகள் பதிவானது. தெலுங்கானாவில் 73.2 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.

மிசோரம் மாநிலத்தில் 13 மையங்களில் உருவாக்கப்பட்டுள்ள 40 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும். 5 மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கையை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணியில் இருந்து மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். 10 மணிக்கு ஓரளவு முன்னிலை நிலவரம் தெரிந்து விடும். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையையும் உடனுக்குடன் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
11 மணி அளவில் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். 5 மாநில தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கான அரை இறுதி போட்டி போல கருதப்படுவதால் தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
5 மாநில தேர்தலுக்கு முன்பும், ஓட்டுப்பதிவுக்கு பிறகும் பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய கருத்து ஒரு மாதிரியாகவும் பிந்தைய கருத்து கணிப்பு வேறு மாதிரியாகவும் அமைந்துள்ளன.
என்றாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என்று அனைத்து கருத்து கணிப்புகளும் ஒருமித்த குரலில் கூறி உள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கு இடையே கடும் இழுபறி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறி உள்ளன.
மிசோரம் மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டு உள்ளது.
5 மாநில தேர்தல் நடந்தாலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் 3 மாநில தேர்தல் முடிவுகள் தான் மிக ஆவலை ஏற்படுத்தி உள்ளன. இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
இந்த 3 மாநிலங்களிலும் சுமார் 65 பாராளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. - காங்கிரசுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். #AssemblyElections

வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும்போது அஜாக்கிரதையாக இந்த எந்திரத்தை தவறவிட்டிருக்கலாம் என தெரிகிறது. அலட்சியமாக செயல்பட்டதாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #RajasthanElections #BallotUnit
200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ராஜஸ்தானில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி, வாக்கு சேகரித்து, பிரசாரம் செய்து வருகிறார்.
மேவார் பகுதியில் உள்ள பில்வாரா நகரில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, ‘சில ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதே நாளில் உலகையே உலுக்கிய மும்பை தாக்குதல் நடந்தது. அப்போது, காங்கிரஸ்காரர்கள் தேசபக்தி தொடர்பாக பாடம் நடத்தி கொண்டிருந்தனர்.
ஆனால், பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நாங்கள் தாக்குதல் நடத்தியபோது இந்த நாடே பெருமைப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மட்டும் கேள்வி கேட்டது. தாக்குதல் நடத்தியதற்கான வீடியோ ஆதாரம் தேவை என்று வலியுறுத்தியது.

தங்கள் இனத்தவர்களுக்கு என்று தனிப்பட்ட அமைச்சகம் தேவை. தனியான நிதி ஒதுக்கீடு மற்றும் பழங்குடியினத்துக்கு என தனி மந்திரி தேவை என அவர்கள் வலியுறுத்தி வந்தனர், ஆனால், காங்கிரஸ் அரசு இதை கண்டுகொள்ளவில்லை. வாஜ்பாய் பிரதமரான பிறகுதான் பழங்குடியின மக்களுக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது’ என்று தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, பனேஷ்வர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘மத்தியில் முன்னர் காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோதே விளைபயிர்களுக்கான காப்பீடு, விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவர்களால் தங்களது பதவி நாற்காலியை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறைகள் கடந்த 55 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளன. ஆனால், மின்சாரம், குடிநீர், சாலைகள், கழிப்பிட வசதி ஆகியவை கிராமங்களை சென்று சேரவே இல்லை’ என்று தெரிவித்தார்.
மேலும், நமது நாடு 75-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு இருக்கும் எனவும் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். #houseby2022 #PMModi #ModiinRajasthan #Rajasthanpolls

ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7-ந்தேதியும், மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் வருகிற 28-ந்தேதியும், சத்தீஸ்கரில் வருகிற 12 மற்றும் 20-ந்தேதிகளிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த மாநிலங்களில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இது நடப்பதால் 5 மாநில தேர்தல் அதற்கான ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது.
கடந்த மாதம் நடந்த கருத்து கணிப்புகளில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.க.வுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த புதிய கருத்துக்கணிப்பை ஏ.பி.பி.நியூ- லோக்நிதி சி.எஸ்.டி.எஸ். எனும் அமைப்பு நடத்தியுள்ளது. நேற்று அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 160 இடங்களிலும், காங்கிரஸ் 105 இடங்களிலும் மற்றவர்கள் 9 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 120 இடங்களிலும் காங்கிரஸ் 95 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் 4-வது தடவையாக பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சில புதிய கருத்து கணிப்புகளில் பா.ஜ.க., காங்கிரஸ் சம அளவில் வெற்றி வாய்ப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. 52 முதல் 60 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 17 முதல் 25 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 இடங்களில் காங்கிரஸ் கட்சி 110 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு 84 இடங்களில்தான் வெற்றி கிடைக்கும் என்று சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் 85 சதவீதம் இடங்களை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. #BJP #Congress
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. வசுந்தரா ராஜேசிந்தியா முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதையடுத்து இம்மாத இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதற்கிடையே பா.ஜனதா மேலிடம் ராஜஸ்தானின் தேர்தல் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. மேலிட பொறுப்பாளரான அவினாஷ்ராய் கன்னா ஜெய்ப்பூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு பற்றி கருத்துக்கள் கேட்டார். மீண்டும் அவர்களுக்கு டிக்கெட் வழங்கலாமா? அல்லது புதுமுகங்களை களத்தில் இறக்கலாமா? என்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவினாஷ் கன்னா நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜஸ்தான் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த தவறான கருத்தும் இல்லை.
ஆனால் செயல்பாடு சரி இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு பதில் புதுமுகங்கள் களத்தில் இறக்கப்படுவார்கள். மக்கள் மத்தியில் பெயர் பெற்று நல்ல முறையில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜனதாவின் பலம் 160 ஆக உள்ளது. அவர்களது செயல்பாடுகள் பற்றி பா.ஜனதா ரகசியமாக கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 60 சதவீத எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு சரியில்லை என்றும் அவர்களுக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட் வழங்கினால் டெபாசிட் இழப்பார்கள் என்றும் தகவல் வெளியானது.
இதுபற்றியும் அவினாஷ் ராய் கன்னா ஆலோசனை நடத்தினார். எனவே 60 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வாய்ப்பு இல்லை என்றும் அவர்களுக்கு பதில் மக்கள் செல்வாக்கு பெற்ற புதுமுகங்களுக்கு டிக்கெட் வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. #RajasthanAssemblyElection #BJP
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 3 மாநில தேர்தல்கள் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் 3 மாநில சட்டசபை தேர்தல் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானில் வசுந்தர ராஜேசிந்தியா தலைமையிலும், மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலும், சத்தீஸ்கரில் ராமன்சிங் தலைமையிலும் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று இருந்தது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பா.ஜ.க. 165-ல் வெற்றி பெற்று இருந்தது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 இடங்களில் 163 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 இடங்களில் 50 இடங்களை பா.ஜ.க. பெற்று இருந்தது.
இந்த நிலையில் 3 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால் ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொள்ள பா.ஜ.க. தலைவர்கள் வியூகம் வகுத்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி 3 மாநிலங்களிலும் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டது. ராஜஸ்தானில் இன்று அதிகாரப்பூர்வமாக ராஜஸ்தான் கவுரவ யாத்ரா என்ற பெயரில் பிரசார யாத்திரையை அம்மாநில முதல்-மந்திரி வசுந்திரராஜே சிந்தியா தொடங்கி உள்ளார்.
58 நாட்களுக்கு சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணம் செய்யும் வகையில் இந்த யாத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. 165 தொகுதிகளை தொடும் வகையில் யாத்திரை செல்ல உள்ளது.
செப்டம்பர் மாதம் 30-ந்தேதி இந்த யாத்திரை நிறைவடையும். இந்த யாத்திரையில் வசுந்திரராஜே சிந்தியாவுடன் ராஜஸ்தான் உள்துறை மந்திரி குலோப் சந்த் கட்டாரியா, அசோக் பர்னமி எம்.எல்.ஏ. ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
இன்று காலை ராஜ்சம்மந்த் என்ற இடத்தில் உள்ள சர்புஜா கோவிலில் இந்த யாத்திரையை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையின்போது 135 பொதுக்கூட்டங்களில் வசுந்திரராஜே சிந்தியா பேச உள்ளார்.
500 இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர். மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 180 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்த யாத்திரையை பா.ஜ.க. தொடங்கி உள்ளது.
பா.ஜ.க. பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருப்பதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் ராஜஸ்தான் செல்ல உள்ளார். இந்த மாத இறுதியில் அவர் அந்த மாநிலத்தில் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். முதல் கட்ட பயணத்தின்போது 3 கோவில்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நத்வாரா என்னும் இடத்தில் ஸ்ரீநாத்ஜி எனும் கோவில் சிகார் எனும் இடத்தில் உள்ள கதுசியாம்ஜி கோவில் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த் தேவ்ஜி ஆகிய 3 கோவில்களுக்கும் முதலில் ராகுல் சென்று வழிபாடு செய்து விட்டு பிரசாரத்தை செய்ய உள்ளார்.
குஜராத் மற்றும் கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தல்களின் போது ராகுல் அதிகமான இந்து கோவில்களுக்கு சென்று வழிபட்டார். பா.ஜ.க. தலைவர்களுக்கு போட்டியாக அவர் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவரது ஆலய பிரசாரத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. எனவே இந்துக்களின் ஓட்டுகளை குறி வைத்து அவர் ராஜஸ்தானிலும் இந்து ஆலயங்களுக்கு அதிகளவில் செல்ல முடிவு செய்துள்ளார்.
ராகுலை எந்தெந்த இந்து ஆலயங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற பட்டியலை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின்பைலட் தயாரித்து வருகிறார்.