என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆட்சிக்கு வந்தால் அவர்களை ஒழித்துக் கட்டுவோம்.. ராஜஸ்தானில் பிரதமர் மோடி அதிரடி
- ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளை வீணடித்து விட்டது.
- தலித், ஏழை மக்கள் பாதுகாப்பான நிலையில் இல்லை.
இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலத்தை தொடர்ந்து இன்று (நவம்பர் 9) மாலை ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "ராஜஸ்தானில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் அசோக் கெலோட் தலைமையிலான அரசு ராஜஸ்தான் மாநிலத்தை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்கள் பட்டியலின் முதலிடத்திற்கு கொண்டுவந்துள்ளது."
"ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தலித் மற்றும் ஏழை மக்கள் பாதுகாப்பான நிலையில் இல்லை. முதல்வர் இருக்கையில் யாரை அமர வைப்பது என்பதை முடிவு செய்வதிலேயே காங்கிரஸ் அரசாங்கம், ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளை வீணடித்து விட்டது."
"நவம்பர் 25-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் ராஜஸ்தானில் உள்ள குண்டர்கள் ராஜ்ஜியத்தை அடியோடு ஒழிப்போம்," என்று தெரிவித்தார்.