search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
    X

    ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
    • 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிரசாரத்திற்கு இன்றுடன் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது.

    இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதசரா, சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

    தேர்தல் அறிக்கையில் "விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். சுவாமிநாதன் அறிக்கையின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். காங்கிரஸ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதில் 4 லட்சம் வேலை அரசு செக்டாரில் ஏற்படுத்தப்படும்.

    பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    ராஜஸ்தானின் பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதியில் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இதனை 2030-க்குள் 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு" உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பிடித்துள்ளனர்.

    Next Story
    ×