என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: 40 டிகிரியில் கொளுத்தும் வெயில்.. மக்களுக்கு கம்பளிப் போர்வைகள் தந்து பீகார் அமைச்சர் வினோதம்
    X

    VIDEO: 40 டிகிரியில் கொளுத்தும் வெயில்.. மக்களுக்கு கம்பளிப் போர்வைகள் தந்து பீகார் அமைச்சர் வினோதம்

    • பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டும் அவர் இந்த தர்ம காரியத்தை செய்தது தெரியவந்துள்ளது.
    • போர்வைகளை வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி டிரால்களுக்கு உள்ளாகி வருகின்றன.

    கொளுத்தும் வெயிலுக்கு பீகார் அமைச்சர் தனது தொகுதி மக்களுக்கு கம்பளிப் போர்வைகள் கொடுத்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.

    பீகாரில் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இவரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. நிதிஷ் குமார் அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த சுரேந்திர மேத்தா விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

    இந்நிலையில் 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை வாட்டி வதைத்து வரும் சுரேந்திர மேத்தா தனது பச்வாரா சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள அஹியாபூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 500க்கும் மேற்பட்ட கம்பளிப் போர்வைகளை விநியோகித்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டும் அவர் இந்த தர்ம காரியத்தை செய்தது தெரியவந்துள்ளது.

    தான் செய்த நற்காரியத்தில் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த மேத்தா, "உலகின் மிகப்பெரிய கட்சி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வோடு செயல்படும் பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டு, பச்வாரா சட்டமன்றத் தொகுதியின் கோவிந்த்பூர்-2 பஞ்சாயத்தின் அஹியாபூர் கிராமத்தில் இன்று கொண்டாடப்பட்டு, மக்களுக்கு போர்வைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். அவர் போர்வைகளை வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி டிரோல்களுக்கு உள்ளாகி வருகின்றன.

    Next Story
    ×