என் மலர்
கிரிக்கெட் (Cricket)

திலக் வர்மா போராட்டம் வீண்: 51 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 213 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் டி காக் அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்தார்.
சண்டிகர்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டி20 பஞ்சாப்பின் சண்டிகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் 90 ரன்கள் குவித்தார். டெனோவன் பெரைரா 30 ரன்னும், மார்க்ரம் 29 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டக் அவுட்டானார். அபிஷேக் சர்மா 17 ரன்னிலும், சூர்யகுமார் 5 ரன்னிலும், அக்சர் படேல் 21 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் திலக் வர்மா தனியாக போராடினார். அவர் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி 19.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.






