என் மலர்
நீங்கள் தேடியது "Tilak Varma"
- தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டியது முக்கியம்.
- 'பவர்-பிளே'யில் 3-4 விக்கெட்டுகளை இழந்தாலும் கூட அதிரடியாக ஆடும் பாணியை மாற்றக்கூடாது.
சென்னை:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி அபிஷேக் ஷர்மா (55 ரன்), ஹர்திக் பாண்ட்யா (50 ரன்), திலக் வர்மா (44 ரன், 16 பந்து, 3 பவுண்டரி, 4 சிக் சர், இஷான் கிஷன் (38 ரன்) ஆகியோரின் 'சரவெடி' ஷாட்டுகளால் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தியது. 20 ஓவர் உல கக் கோப்பையில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 184 ரன் னில் அடங்கி தோல்வியை தழுவியது.
பின்னர் இந்திய வீரர் திலக் வர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு அணியாக அதிக ரன் குவிப்பதை எதிர்நோக்குகிறோம். 'பவர்-பிளே'யில் 3-4 விக்கெட்டுகளை இழந்தாலும் கூட அதிரடியாக ஆடும் பாணியை மாற்றக்கூடாது என்பது குறித்து ஆலோசித்துள்ளோம்.
தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டியது முக்கியம். அப்போது தான் 3, 4-வது மற்றும் 5-வது வரிசை பேட்டர்கள் அதே நம்பிக்கையுடன் தொடருவார்கள். அந்த வகையில் சஞ்சு சாம்சன் (24 ரன்) அருமையான தொடக்கத்தை தந்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்க தயாராக இருக்கிறார்கள் என்ற அச்சத்தை எதிரணி பந்து வீச்சாளர்களிடம் பார்க்க விரும்புகிறோம். அந்த மனநிலையுடன் தான் இந்த ஆட்டத்தில் விளையாடினோம்.
ஜிம்பாப்வே ஆட்டத்துக்கு முன்பாக சிறந்த மனநிலையுடன் களத்திற்கு செல்வது குறித்தும், உற்சாகமாக விளையாடுவது குறித்தும் விவாதித்தோம். 20 ஓவர் கிரிக்கெட்டில் கடந்த ஓராண்டாக நாங்கள் எப்படி ஆடினோம் என்ற வீடியோவை பார்த்தோம். இந்த வீடியோவை பார்த்த பிறகு ஒவ்வொருவருக்கும் புதிய நம்பிக்கை வந்தது.
தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், சூழ்நிலை எதுவாக இருந்தாலும் கடந்த ஓராண்டாக நாம் எப்படி 20 ஓவர் கிரிக்கெட்டை விளையாடி வெற்றிகளை குவித்தோம். உள்ளூரில் தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக ஆடியதை நினைவில் கொள்ளுங்கள். எத்தகைய நிலைமை இருந்தாலும் ஒரு தனிநபராக மகிழ்ச்சியோடு உற்சாகமாக அனுபவித்து விளையாடுங்கள் என்று அறிவுறுத்தினார். கடந்த கால ஆட் டங்களின் வீடியோ மற்றும் கம்பீர் அளித்த உத்வேகம் சாதிக்க உதவியது.
இவ்வாறு திலக் வர்மா கூறினார்.
- ஹர்திக் பாண்ட்யா தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
- திலக் வர்மா 24 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.
7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.
9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.
11.1 ஓவரில் 100 ரன்னைக் கடந்த இந்தியா 14 ஓவரில் 125 ரன்னைத் தொட்டது. 15-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.
4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா 14.3 ஓவரில் 126 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.
- உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.
- நாங்கள் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறோம்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற நிலையில், பாகிஸ்தான் U-Turn ஆனதால் வருகிற 15-ந்தேதி திட்டமிட்டபடி கொழும்பில் போட்டி நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிக்காக உற்சாகமாகவும், தயாராகவும் இருக்கிறோம் என திலக் வர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடக்கப்போகிறது என்று ஒருநாளைக்கு முன்னர்தான் தெரியவந்துள்ளது. நாங்கள் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறோம்.
நாங்கள் அனைத்து அணிகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறோம். பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம். வீரர்களும், அணி ஸ்டாஃப்களும் தயார். தற்போது நாங்கள் போட்டிக்கான பகுதியில் இருக்கிறோம். திட்டங்கள் தொடங்கப்படும்.
இவ்வாறு திலக் வர்மா தெரிவித்தார்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதை வென்றவர் திலக் வர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒருநாள் போட்டி தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.
- டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.
புதுடெல்லி:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
ஒருநாள் போட்டி தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் இருந்து இந்தியாவின் அதிரடி வீரரான திலக் வர்மா விலகி உள்ளார்.
திலக் வர்மாவுக்கு ராஜ்கோட்டில் வயிற்றுப் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று காலை மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது சீராகவும், நல்ல முன்னேற்றத்துடனும் உள்ளார்.
மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்பது பயிற்சி மற்றும் திறன் நிலைகளுக்குத் திரும்பும் போது அவரது முன்னேற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
- பந்துவீச்சாளர் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
துபாய்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் திலக் வர்மா தென் ஆப்பிரிக்கா தொடரில் 187 ரன்கள் குவித்து ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டு முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 18வது இடத்தைப் பிடித்தார். அவர் மூன்று போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 10வது இடத்திற்குச் சென்றார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் நடந்தது போன்று ஏற்கனவே நடந்து இருக்கிறது.
- சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் களம் இறங்கி விளையாட வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூ சண்டிகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
நாளைய போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறப் போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
இந்தப் போட்டியையொட்டி இந்திய வீரர் திலக் வர்மா பேட்டி அளித்தார். அப்போது போட்டியின் சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் களம் இறங்கி விளையாட வீரர்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திலக் வர்மா கூறியதாவது:-
அணியில் உள்ள தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் எந்தவரிசையிலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கிறார்கள். நான் 3, 4, 5, அல்லது 6-வது வீரராகவும் களமிறங்கி ஆட தயாராக இருக்கிறேன். வெற்றி பெறுவதற்கு ஒரு முடிவு சிறந்ததாக இருக்கும் என அணி நிர்வாகம் உணரும் போது அனைவரும் அணி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவேண்டும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் நடந்தது போன்று ஏற்கனவே நடந்து இருக்கிறது. அக்ஷர் படேல் இதற்கு முன்பு முன்னதாக களம் இறக்கப்பட்டு சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஆட்டத்தின் சூழலைப் பொறுத்தே அணி நிர்வாகத்தின் முடிவுகள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆட்டத்தில் அக்ஷர் படேல் 3-வது வீரராக ஆடியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்தே திலக் வர்மா இந்த விளக்கத்தை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 213 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் டி காக் அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்தார்.
சண்டிகர்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டி20 பஞ்சாப்பின் சண்டிகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் 90 ரன்கள் குவித்தார். டெனோவன் பெரைரா 30 ரன்னும், மார்க்ரம் 29 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டக் அவுட்டானார். அபிஷேக் சர்மா 17 ரன்னிலும், சூர்யகுமார் 5 ரன்னிலும், அக்சர் படேல் 21 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் திலக் வர்மா தனியாக போராடினார். அவர் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி 19.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கான எனது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
- ஆனால், என்னுடைய மிகப்பெரிய இலக்கு உலகக் கோப்பை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 147 இலக்கை எதிர்நோக்கி களம் இறங்கியது. 3 விக்கெட் விரைவாக இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் திலக் வர்மா கடைசி வரை களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இறுதிப் போட்டி மற்றும் வெற்றி பெற்றது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-
முதலில் பிரதமர் மோடி இதை ஆபரேஷன் சிந்தூர் என அழைத்தார். ஆனால், ஆபரேஷன் திலக் என்று அழைப்பது மிகப்பெரிய விசயம். விளையாட்டில், நாங்கள் நம்முடைய நாட்டிற்காக விளையாடுகிறோம். சரியான தருணத்தில், சரியான நேரத்தில் நான் வாய்ப்பை பெற்றேன். எனது நாட்டிற்காக வெற்றி தேடிக்கொடுத்ததை சிறந்ததாக உணர்கிறேன்.
இறுதிப் போட்டியில் பதட்டம் நிலவியது. நாம் 3 விக்கெட்டை முன்னதாகவே இழந்தபோது, பாகிஸ்தான் வீரர் இன்னும் தீவிரமாக முயற்சி செய்தனர். நான் களத்தில் நின்றிருந்தேன். நாள் முன்னதாக சொன்னது போன்று, நான் அதற்குள் சிக்கி ஷாட் ஆட முயற்சி செய்திருந்தால், எனது நாட்டை தோல்வி பாதைக்கு அழைத்துச் சென்றிருப்பேன். நான் எப்போதும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பேன். போட்டியில் வெற்றி பெற தேவை என்னது? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
போட்டியின்போது ஏராளமான விசயங்கள் நடந்தன. மீடியா முன் அனைத்தையும் சொல்ல முடியாது. குறிப்பாக இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது நடைபெற்றது. போட்டிதான் உண்மையான பதிலடி. நான் அதை செய்ய விரும்பினேன். அதைச் செய்தேன்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கான எனது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், என்னுடைய மிகப்பெரிய இலக்கு உலகக் கோப்பை. 2011 உலகக் கோப்பையை பார்க்கும்போது, நான் கிரிக்கெட்டை விரும்ப தொடங்கினேன். அதன்பின் தொழில்முறை கிரிக்கெட்டை தொடங்கினேன்.
அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பையில் ஒரு பகுதியாக இருந்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன். இதுதான் என்னுடைய அல்டிமேட் கோல்.
இவ்வாறு திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
- ஆட்டத்தில் மிகுந்த அழுத்தம் இருந்தது.
- எந்த வரிசையிலும் விளையாட நான் தயாராக இருந்தேன்.
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் திலக் வர்மாவின் அதிரடியான ஆட்டம் ஆசிய கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது. 53 பந்தில் 69 ரன்கள் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த அவர் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.
இது குறித்து திலக்வர்மா கூறியதாவது:-
எனது வாழ்க்கையில் மிக சிறந்த இன்னிங்ஸ். ஆட்டத்தில் மிகுந்த அழுத்தம் இருந்தது. எந்த வரிசையிலும் விளையாட நான் தயாராக இருந்தேன். பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள். சஞ்சு சாம்சனின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. நெருக்கடியான நிலையிலும் ஷிவம் துபே பேட்டிங் செய்த விதம் நாட்டுக்கு முக்கியமானது.
இவ்வாறு திலக்வர்மா கூறியுள்ளார்.
- ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.
- கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.
இந்திய அணி கோப்பையை பெற்றுக்கொள்ளாததால் ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.
இதனிடையே, இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் கோப்பையை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.சி.சி.ஐ. தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா, "பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை நாங்கள் வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 146 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 150 ரன்கள் எடுத்து ஆசிய கோப்பையை வென்றது.
துபாய்:
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பர்ஹான் 57 ரன்னிலும், பகர் சமான் 47 ரன்னிலும் வெளியேறினர்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. சிறப்பாக ஆடி வந்த அபிஷேக் சர்மா 5 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 20 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து இந்தியா தத்தளித்தது.
4வது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி 57 ரன்களை சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 24 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஷிவம் துபே திலக் வர்மாவுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய திலக் வர்மா அரை சதம் கடந்து அசத்தினார்.
இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. திலக் வர்மா 69 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் இந்தியாவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 59 ரன்னில் வெளியேறினார். ரியான் ரிக்கல்டன் 41 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ரோகித் சர்மா 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய நமன் தீர் 17 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே ஜாக் பிரேசர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து, அபிஷேக் பொரேலுடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். கருண் நாயர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். 2வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்த நிலையில் பொரேல் 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிரடியைத் தொடர்ந்த கருண் நாயர் 40 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்து அவுட்டானார். கே எல் ராகுல் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.






