என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

கருண் நாயர் அதிரடி வீண்: டெல்லியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது மும்பை
- டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 59 ரன்னில் வெளியேறினார். ரியான் ரிக்கல்டன் 41 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ரோகித் சர்மா 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய நமன் தீர் 17 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே ஜாக் பிரேசர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து, அபிஷேக் பொரேலுடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். கருண் நாயர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். 2வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்த நிலையில் பொரேல் 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிரடியைத் தொடர்ந்த கருண் நாயர் 40 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்து அவுட்டானார். கே எல் ராகுல் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.






