search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 rankings"

    • டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் உள்ளார்.
    • பந்துவீச்சாளர்க்கான தரவரிசையில் தீப்தி சர்மா 3-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (733 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

    இந்தப் பட்டியலின் முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலிய வீராங்கனை தஹிலா மற்றும் பெத் மூனி (766 ரேட்டிங் புள்ளி) இடம் பிடித்துள்ளனர்.

    இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா 6-வது இடத்திலும், ஜெமிமா 10-வது இடத்திலும் உள்ளனர்.

    அதேபோல், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 3-வது இடம் பிடித்துள்ளார்.

    பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா 3-வது இடத்திலும், ரேணுகா சிங் 5-வது இடத்திலும் உள்ளார்.

    • டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    • பந்துவீச்சாளர்க்கான தரவரிசையில் தீப்தி சர்மா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறினார்.

    துபாய்:

    பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (730 ரேட்டிங் புள்ளி) முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனியை (743 ரேட்டிங் புள்ளி) விட மந்தனா 13 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். 3-வது இடத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் உள்ளார்.

    இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா 7-வது இடத்திலும், ஜெமிமா 8-வது இடத்திலும் உள்ளனர்.

    அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சக இந்திய வீராங்கனை ரேணுகா சிங் உள்ளார்.

    ஐசிசி டி20 போட்டிகளில் பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை.
    துபாய்:

    சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

    இதில், பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மார்க்ராம் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
     
    இந்திய கேப்டன் விராட் கோலி 8-வது  இடத்துக்கு பின்தங்கினார். மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் ராகுல் 5-வது இடத்துக்கு முன்னேறினார். 

    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 6 இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். முதலிடத்தில் இலங்கையின் ஹசரங்கா, 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி, 3-வது இடத்தில் இங்கிலாந்தின் அடில்  ரஷித் நீடிக்கின்றனர்.

    ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்திலும், வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

    ஐசிசி டி20 போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை.
    துபாய்:

    சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

    இதில், பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 2-வது  இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

    இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது  இடத்திலும் , மற்றொரு இந்திய வீரர் லோகேஷ்  ராகுல் 8-வது இடத்திலும் உள்ளனர். 

    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 6 இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். முதலிடத்தில் இலங்கையின் ஹசரங்கா, 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி, 3-வது இடத்தில் இங்கிலாந்தின் அடில்  ரஷித் நீடிக்கின்றனர்.

    ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்திலும், வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். #India #T20Rank #KuldeepYadav
    துபாய்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டி தொடர் முடிவின் அடிப்படையில் வீரர்கள் தரவரிசைபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாபர் அசாம் (பாகிஸ்தான்), காலின் முன்ரோ (நியூசிலாந்து), முதல் 2 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா) ஒரு இடம் சரிவு கண்டு 3-வது இடத்தை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்நாயகன் விருது பெற்ற இந்திய வீரர் ஷிகர் தவான் 5 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தையும், ரோகித் சர்மா 2 இடம் சரிந்து 6-வது இடத்தையும், லோகேஷ் ராகுல் 2 இடம் பின்தங்கி 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமான் 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் விராட்கோலி 14-வது இடத்தை பெற்றுள்ளார்.

    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் முறையே முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 17 இடம் முன்னேறி 5-வது இடத்தை பெற்றுள்ளார். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் முதலிடத்தை பெற்றுள்ளார். #India #T20Rank #KuldeepYadav 
    ×