என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐசிசி டி20 தரவரிசை: டாப் 3 பட்டியலில் இடம்பிடித்தார் திலக் வர்மா
- பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
- பந்துவீச்சாளர் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
துபாய்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் திலக் வர்மா தென் ஆப்பிரிக்கா தொடரில் 187 ரன்கள் குவித்து ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டு முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 18வது இடத்தைப் பிடித்தார். அவர் மூன்று போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 10வது இடத்திற்குச் சென்றார்.






