என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    என்னுடைய அல்டிமேட் கோல் இதுதான்: வெற்றி நாயகன் திலக் வர்மா சொல்கிறார்
    X

    என்னுடைய அல்டிமேட் கோல் இதுதான்: வெற்றி நாயகன் திலக் வர்மா சொல்கிறார்

    • ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கான எனது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
    • ஆனால், என்னுடைய மிகப்பெரிய இலக்கு உலகக் கோப்பை.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 147 இலக்கை எதிர்நோக்கி களம் இறங்கியது. 3 விக்கெட் விரைவாக இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் திலக் வர்மா கடைசி வரை களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இறுதிப் போட்டி மற்றும் வெற்றி பெற்றது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-

    முதலில் பிரதமர் மோடி இதை ஆபரேஷன் சிந்தூர் என அழைத்தார். ஆனால், ஆபரேஷன் திலக் என்று அழைப்பது மிகப்பெரிய விசயம். விளையாட்டில், நாங்கள் நம்முடைய நாட்டிற்காக விளையாடுகிறோம். சரியான தருணத்தில், சரியான நேரத்தில் நான் வாய்ப்பை பெற்றேன். எனது நாட்டிற்காக வெற்றி தேடிக்கொடுத்ததை சிறந்ததாக உணர்கிறேன்.

    இறுதிப் போட்டியில் பதட்டம் நிலவியது. நாம் 3 விக்கெட்டை முன்னதாகவே இழந்தபோது, பாகிஸ்தான் வீரர் இன்னும் தீவிரமாக முயற்சி செய்தனர். நான் களத்தில் நின்றிருந்தேன். நாள் முன்னதாக சொன்னது போன்று, நான் அதற்குள் சிக்கி ஷாட் ஆட முயற்சி செய்திருந்தால், எனது நாட்டை தோல்வி பாதைக்கு அழைத்துச் சென்றிருப்பேன். நான் எப்போதும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பேன். போட்டியில் வெற்றி பெற தேவை என்னது? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

    போட்டியின்போது ஏராளமான விசயங்கள் நடந்தன. மீடியா முன் அனைத்தையும் சொல்ல முடியாது. குறிப்பாக இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது நடைபெற்றது. போட்டிதான் உண்மையான பதிலடி. நான் அதை செய்ய விரும்பினேன். அதைச் செய்தேன்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கான எனது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், என்னுடைய மிகப்பெரிய இலக்கு உலகக் கோப்பை. 2011 உலகக் கோப்பையை பார்க்கும்போது, நான் கிரிக்கெட்டை விரும்ப தொடங்கினேன். அதன்பின் தொழில்முறை கிரிக்கெட்டை தொடங்கினேன்.

    அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பையில் ஒரு பகுதியாக இருந்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன். இதுதான் என்னுடைய அல்டிமேட் கோல்.

    இவ்வாறு திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×