என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    என் வாழ்க்கையில் சிறந்த ஆட்டம்- திலக் வர்மா
    X

    என் வாழ்க்கையில் சிறந்த ஆட்டம்- திலக் வர்மா

    • ஆட்டத்தில் மிகுந்த அழுத்தம் இருந்தது.
    • எந்த வரிசையிலும் விளையாட நான் தயாராக இருந்தேன்.

    பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் திலக் வர்மாவின் அதிரடியான ஆட்டம் ஆசிய கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது. 53 பந்தில் 69 ரன்கள் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த அவர் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.

    இது குறித்து திலக்வர்மா கூறியதாவது:-

    எனது வாழ்க்கையில் மிக சிறந்த இன்னிங்ஸ். ஆட்டத்தில் மிகுந்த அழுத்தம் இருந்தது. எந்த வரிசையிலும் விளையாட நான் தயாராக இருந்தேன். பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள். சஞ்சு சாம்சனின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. நெருக்கடியான நிலையிலும் ஷிவம் துபே பேட்டிங் செய்த விதம் நாட்டுக்கு முக்கியமானது.

    இவ்வாறு திலக்வர்மா கூறியுள்ளார்.

    Next Story
    ×