விருத்தாசலம் அருகே தலையில் கல் விழுந்து மாணவி பலி

சிகிச்சை பலன் இன்றி சிறுமி பவினா பரிதாபமாக உயிரிழந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே தலையில் கல் விழுந்து மாணவி பலி
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள எடையூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் . இவரது மகள் பவினா (வயது 8 ). இவர் விருத்தாச்சலம் புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று விளங்காட்டூர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் முன்பு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திடீரென்று கற்கள் சரிந்து கீழே விழுந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பவினா தலையில் விழுந்தது. இதில் சிறுமி பவினாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுமி பவினா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து விருத்தாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com