கடலூர் அருகே சாலையின் நடுவில் சிமெண்ட் தடுப்பு கட்டையில் லாரி மோதியது: டிரைவர் படுகாயம்

சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது. நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரக்கால்பட்டு சாலையில் சிமெண்ட் தடுப்பு கட்டையில் லாரி மோதி நிற்கும் காட்சி.
வரக்கால்பட்டு சாலையில் சிமெண்ட் தடுப்பு கட்டையில் லாரி மோதி நிற்கும் காட்சி.
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த வரக்கால்பட்டு பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது வரக்கால்ப ட்டு பகுதியில் சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது. அப்போது முன்பக்க சக்கரம் அச்சு முறிந்து லாரியில் இருந்த டிரைவர் லேசான காயமடைந்தார். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் செஞ்சி பகுதியில் இருந்து மாடு எலும்புகளை ஏற்றிக்கொண்ட கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு சென்ற போது எதிர்பாராமல் சிமெண்ட் தடுப்பு கட்டை மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com