search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sappara Bavani"

    • விழா நாட்களில் தினசரி காலையிலும், மாலையிலும் வழக்கமான பூஜையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
    • நிறைவு நாளான நேற்று இரவு பூஜையை தொடர்ந்து அம்மனின் பூஞ்சப்பரபவனி தொடங்கியது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவிலில் தசரா திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.

    விழா நாட்களில் தினசரி காலையிலும், மாலையிலும் வழக்கமான பூஜையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. ஒவ்வொரு நாளும் கிருஷ்ணராகவும், சுப்பிரமணியராகவும், மகாலட்சுமியாகவும், பராசக்தியாகவும், அன்னபூரணியாகவும், சரஸ்வதியாகவும் அம்பாளின் காட்சியருளல் நடந்தது. நிறைவு நாளான நேற்று இரவு பூஜையை தொடர்ந்து அம்மனின் பூஞ்சப்பரபவனி தொடங்கியது. முக்கிய வீதிகளின் வழியாக சென்ற சப்பரபவனி இன்று காலையில் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதாகிருஷ்ணன், தங்கப்பாண்டியன் உள்பட பலர் செய்திருந்தனர்.

    • விழா நாட்களில் அம்மன், பவளமுத்து விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • 11-ம் திருவிழாவில் நள்ளிரவு 1 மணிக்கு அம்மன், விநாயகர் ஆகிய 2 பூஞ்சப்பர பவனி தொடங்கியது.

    உடன்குடி:

    உடன்குடி கொட்டங்காடு தேவி பத்ரகாளி அம்மன் கோவிலில் 12 நாள் புரட்டாசி திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி கொடியேற்றறத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன், பவளமுத்து விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள், அம்பாள் உள்பிரகார சப்பரபவனி, ஊஞ்சல் சேவை, சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி கோலத்தில் பவனி வருதல், வில்லிசை, திருவிளக்கு பூஜை, தினசரி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    11-ம் திருவிழாவில் நள்ளிரவு 1 மணிக்கு அம்மன், விநாயகர் ஆகிய 2 பூஞ்சப்பர பவனி தொடங்கியது. மறுநாள் காலையில் சப்பரங்கள் கோவிலை வந்தடைந்தவுடன், கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பூஜை, வரிதாரர்களுக்கு வரிபிரசாதம் வழங்கல் நடைபெற்றறது.

    ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா சுந்தர ஈசன் மற்றும் விழாக்குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.

    • திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது.
    • இந்த ஆராதனையில் கள்ளிக்குளம் பனிமய அன்னை மெட்ரிக் பள்ளி முதல்வர் மணி மறையுரை ஆற்றினார்.

    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 18-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.

    திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது.

    9-ம் திருவிழா மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, திருவிழா சிறப்பு மாலை ஆராதனை தூத்து க்குடி மறை மாவட்ட குருகுல முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. இந்த ஆராதனையில் கள்ளிக்குளம் பனிமய அன்னை மெட்ரிக் பள்ளி முதல்வர் மணி மறையுரை ஆற்றினார்.

    இதில் பங்குத்தந்தைகள் ரெமிஜியூஸ், ராபின், இருதயசாமி, கலை செல்வம் மற்றும் இறை மக்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு அன்னை மற்றும் புனிதர்களின் உருவ சப்பர பவனி நடந்தது.

    10-ம் திருவிழாவான நேற்று காலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலியும் சாத்தான்குளம் மறை வட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் நடந்தது. தைலாபுரம் பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் வரவேற்றார். சோமநாதபேரி பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் மறையுரை ஆற்றினார்.

    இதில் பங்குத்தந்தைகள் சலேட் ஜெரால்ட், மணி, இருதயசாமி, கலைச்செல்வன், விஜயன் மற்றும் இறைமக்கள் திரளானோர் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு திருமுழுக்கு வழங்குதல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு அன்னை மற்றும் புனிதர்களின் உருவ சப்பர பவனியும் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். அன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி தென் மண்டல பணிக்குழுக்கள் ஒருங்கி ணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடந்தது. சவேரியார்புரம் பங்குத்தந்தை ரெமிஜியூஸ் மறையுரை ஆற்றினார். இரவு 10 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    • புனித அந்தோனியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • சப்பரபவனியில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ராஜமன்னியபுரம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடைக்கலாபுரம் புனித சூசையப்பர் அறநிலைய குரு செட்ரிக் பீரிஸ் அடிகளார் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. பெரியதாழை உதவி பங்குதந்தை கிங்ஸ்லின் மறையுறை நிகழ்த்தினார்.விழா நாட்களில் தினசரி மாலையில் திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தன.

    12-ந் நாளான நேற்று காலை ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாய்சியஸ் உரை நிகழ்த்தினார். தூத்துக்குடி ஆயர் இல்ல பொருளாளர் சகாயம் மாலை ஆராதனையை நடத்தினார். தூத்துக்குடி திருஇருதயங்களின் பேராலய பங்கு தந்தை ரோலிங்டன் உரை நிகழ்த்தினார். இரவில் புனித அந்தோணியார் சொரூப சப்பரபவனி தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது.

    இதில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். இன்று வெள்ளிக்கிழமை காலையில் பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலியும், புது நன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. பின்னர் திருமுழுக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. மாலையில் நற்கருணையாசிரை தொடர்ந்து கொடி இறக்கப்படுகிறது.

    நிறைவு நாளான நாளை பொது அசனம் நடைபெறுகிறது.

    • புரட்டாசி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10-ம் திருநாளன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே கொட்டங்காடு பத்திரகாளி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெற்ற புரட்டாசி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று அம்மன், விநாயகர் சப்பரங்கள் பவனி நடைபெற்றது.இங்கு புரட்டாசி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10-ம் திருநாளன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து ஸ்ரீ பவளமுத்து விநாயகர், தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆகிய இரு சப்பர பவனி தொடங்கியது. ஊரில் உள்ள அனைத்து தெருபகுதிகளிலும் வலம் வந்த சப்பர பவனிக்கு வழிநெடுகிலும் மக்கள் நேமிசங்களைப் படைத்து வழிபட்டனர்.

    சுமார் 24மணி நேரம் இரு சப்பரங்களும் ஊர் முழுவதும் சுற்றி கோவிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்பட்டு புரட்டாசி திருவிழா நிறைவு பெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா சுந்தரஉசன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×