search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kumbabishegam"

    • அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேடு அருகே அத்தியூர் கிராமத்தில் உள்ள விநாயகர், அய்யனார், கருப்புசாமி, திரவுபதி அம்மன், செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதேபோல் வேப்பந்தட்டை வட்டம் மங்களமேடு கிராமத்தில் அமைந்துள்ள மங்கள விநாயகர், மங்கள மாரியம்மன், கரைமேல் அழகர், பெரியசாமி, கருப்பையா ஆகிய தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள கிழுமத்தூர் கிராமத்தில் உள்ள சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • கும்பாபிஷேக விழாவில் கிழுமத்தூர், பெருமத்தூர், உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள கிழுமத்தூர் கிராமத்தில் சௌந்தரிய நாயகி அம்மன், சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை தீர்த்த ஊர்வலம், கோ பூஜை, அதனை தொடர்ந்து மறுநாள் திருப்பள்ளி எழுச்சி, முதல் கால வேள்வி வழிபாடு, விமான கலசங்கள் நிறுவுதல், மருந்து சாத்துதல் நடைபெற்றன.தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால வேள்வி வழிபாடு திருமுறை விண்ணப்பம், அருளார் அமுதம் வழங்குதல், அருட்பிரசாதம் வழங்குதல், நடைபெற்றன.

    நேற்று காலை மூன்றாம் கால வேள்வி வழிபாடு, நாடி சந்தன வழிபாடு, கைலாய வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க திருகலசங்கள் புறப்பாடும் நடைபெற்றன.

    தொடர்ந்து வாண வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.

    நிகழ்ச்சியில் கிழுமத்தூர், பெருமத்தூர், உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அன்னதானமும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளை குன்னம் காவல்துறையினர் செய்திருந்தனர்

    இதேபோல் அத்தியூர் குடிகாட்டில் திரோபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில்அத்தியூர், ஒகளூர், ஆடுதுறை, ஆகிய சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளை மங்களமேடு காவல்துறையினர் செய்து இருந்தனர்

    • மன்னார்கோவில் ராஜகோபாலசாமி கோவிலில் கடந்த 1-ந்தேதி விழா தொடங்கியது.
    • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது.

    வி.கே.புரம்:

    அம்பை அருகே உள்ள மன்னார்கோவில் ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் கடந்த 1-ந்தேதி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று 5 மணிக்கு மேல் புண்யாகம், அக்னி கும்ப பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்று காலை 8 மணிக்கு மேல் ராஜகோபுர விமானம் மற்றும் பரிவாரங்கள் மூலமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது.

    மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான ஆன்மீக தொண்டர்கள் கலந்து கொண்டனர். அம்பை துணை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சந்தியம்மன், சுப்பிரமணிய சுவாமி சன்னதி கோபுரங்களிலும் அபிஷேகம் நடந்தது.
    • வாலவிளை பிரம்மசக்தி அம்மன் கோவிலில் மகா கும்பா பிஷேக விழா நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் வருடாந்திர கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    இதற்கான முன்னேற்பாடு நிகழ்வுகள் மற்றும் சிறப்பு பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. நேற்று காலையில் கணபதி ஹோமத்தை தொடர்ந்து கும்ப பூஜை, யாக பூஜை, திரவிய ஹோமம், துர்கா ஹோமம் ஆகியவை நடந்தன.

    இதன் பின்னர் கோவிலின் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதே போல் சந்தியம்மன், சுப்பிரமணிய சுவாமி சன்னதி கோபுரங்களிலும் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாரிய ம்மன், உச்சினிமாகாளி, முப்புடாதி அம்மன், அக்கினி காளி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடந்தது. ஐயப்ப சிவாச்சாரியார், ஆலய பூஜகர் சங்கர நயினார் குழுவினர் கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தினர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மதியம் அன்னதானம் நடைபெற்றது.மாலையில் லட்சார்ச்சனை தொடங்கியது.இரவில் திருவிளக்கு பூஜையும் அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

    நிறைவு நாளான இன்று மதியம் சிறப்பு பூஜையும் மாலையில் லட்சார்ச்சனை பூர்த்தி செய்யப்பட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிகளில் கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதாகிருஷ்ணன், நகர் நல மன்ற தலைவர் பூபால் ராஜன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், சமூக ஆர்வலர் அமிர்தராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சந்தன மாரியம்மன்

    விநாயகர் கோவில் தெரு சந்தன மாரியம்மன் மற்றும் உச்சினிமாகா ளியம்மன் கோவிலிலும் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாக பூஜை, பூரணாகுதி நடந்தது.இரண்டு சன்னதிகளின் விமான கோபுரங்களில் கும்பாபி ஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும் சைவ வேளாளர் சங்க நிர்வாகிகளுமான சங்கரலிங்கம், முருகன், கற்பக விநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.

    ஸ்ரீ ராமசுவாமி கோவில்

    மேலும் ஆறுமுகநேரி காந்தி தெரு மேல வீடு ஸ்ரீ ராமசுவாமி கோவிலிலும் வருடாந்திர கும்பாபிஷேக விழா நடந்தது.வாலவிளை பிரம்மசக்தி அம்மன் கோவிலில் மகா கும்பா பிஷேக விழா நடை பெற்றது. பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நேற்று ஒரே நாளில் நான்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் ஆறுமுகநேரி விழா கோலம் பூண்டு காட்சியளித்தது.

    • சுத்தமல்லி கொடிமரத்து சுடலைமாடசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • கும்பாபிஷேகத்தையொட்டி 2-ம் யாகசால பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி கொடிமரத்து சுடலைமாடசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், பிரம்மாச்சர்ய பூஜை, தீப லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று சிறப்பு ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், கோ பூஜை, கன்னியாபூஜை, சுமங்கலி பூஜை, தன பூஜை, மாலையில் யாகசாலை பூஜை, சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 6.30 மணிக்கு 2-ம் யாகசால பூஜை, நாடிச்சந்தானம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. 9 மணிக்கு கொடிமரத்து சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மகேஷ்வர பூஜையும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது.

    • திருக்கடுகை மூன்றீஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 4-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

    முக்கூடல்:

    பாப்பாக்குடியில் உள்ள ஸ்ரீ திருக்கடுகை மூன்றீஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

    கடந்த புதன்கிழமை காலை முதல் மகா கணபதி ஹோமம், நவகிரக பூஜை, வாஸ்து சாந்தி பூஜை ஹோமம், கங்கா பூஜை, சிவ சூரிய பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து வியாழக்கிழமை மங்கள இசை, திருமுறை பாராயணம், வேதா பாராயணம், எந்திர பூஜை, ஜெபம், 2-ம் கால யாகசாலை பூஜை, நேற்று மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, சிவசூரிய பூஜை, ஹோம பூஜை, தோரண பூஜை, வேதிகா பூஜை, அர்ச்சனை யாக ஹோமம், தீபாரதனை, யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளுதல், தொடர்ந்து விமான கும்பாபிஷேகம், பிரதான மூர்த்தி பரிவார மூர்த்தி களுக்கு கும்ப லக்னத்தில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து 21 திரவியங்களால் மகா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாரதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை, அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., அறநிலையத்துறை செயல் அலுவலர் ரேவதி, தக்கார் கோமதி, ஆய்வாளர் சந்தான லெட்சுமி, பாப்பாக்குடி கிராம மகாஜனங்கள், பாப்பாக்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளரும் யூனியன் துணை சேர்மனுமான மாரிவண்ணமுத்து, பாப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆணைக்குட்டி பாண்டியன் உட்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் அய்யாதுரை தலைமையிலான அ.தி.மு.க.வினர் எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியனுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பாப்பாக்குடி மற்றும் சுற்றுப்புற வட்டாரத்தில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலயம் கட்டப்பட்டு 600 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மேலும் 22 ஆண்டுகளுக்கு பின்பு தற்பொழுது கும்பாபி ஷேகம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • முஸ்லிம்கள், ஜமாத்தார்கள் சீர் கொடுத்து சிறப்பித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே சேமங்கோட்டை விநாயகர், வில்லிதமுடையார் அய்யனார், தூண்டி கருப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்வாக அரசனாகரிபட்டினம், கோபாலபட்டினம், ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்கள், ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள் கோவிலுக்கு சீர் கொடுத்தும் மற்றும் அன்னதானத்திற்கு 50 மூட்டை அரிசியும் கொடுத்து சிறப்பித்தனர். முஸ்லிம் இளைஞர்கள் மோர், தண்ணீர் பந்தல் மற்றும் ஊரில் நுழைவுவாயிலில் கும்பாபிஷேக வரவேற்பு குறித்து பதாகை வைத்திருந்தனர். இந்த பகுதியில் இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக அங்கு உள்ளவர்கள் கூறினர்.

    • காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • 2-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது

    அரியலூர்:'

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற உக்கிர மகா காளியம்மன் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர். அதன்படி கடந்த 2-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் உக்கிர மகா காளியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர் மற்றும் கருப்புசாமி கோவிலுக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோடாலிகருப்பூர் பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோடாலிகருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்."

    • சிலம்பு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
    • சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலம்பாவயல் ஸ்ரீ சிலம்பு அய்யனார் கோவிலில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அறந்தாங்கி தாலுகா சிலம்பாவயல் கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ சிலம்பு அய்யனார் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, அப்பகுதி மக்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 30ம் தேதி முதல் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 2நாட்களாக இரண்டுகால யாகபூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து அப்புக்காளை கண்ணன் சாஸ்திரிகள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை காண பொதுமக்கள் மற்றும் ஆன்மீக மெய்யன்பர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிலம்பு அய்யனார் அருள்பெற்று சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • அன்னதானமும் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி கிராமத்தில் பட்டவன் சுவாமி கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அந்த கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் கணபதி ஓமம் லட்சுமி ஓமம் நவ கிரக ஓமம் பின்னர் யாக பூஜை நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதான விழா நடைபெற்றது. ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • பாலமேடு அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையப்பட்டி கிராமத்தில் சின்ன அம்மன், அரியநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கருடஹோமம், உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் 3 கால யாகபூஜைகள் முடிவடைந்ததும் வேத மந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு களை வலையபட்டி, சின்னப்பட்டி தெரு விழா கமிட்டியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பாலக்காடு பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • 36 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது

    திருச்சி:

    திருச்சி காஜாபேட்டை, கிருஷ்ணர் கோவில் தெருவில் அமைந்துள்ள பாலக்காடு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 36 வருடங்களுக்கு பிறகு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 9-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், மகாபூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு காவேரியில் இருந்து திருமஞ்சனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10-ந்தேதி இரண்டாம் கால யாக பூஜையும், வேத பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து மகா கும்பாபிஷேக நாளான இன்று காலை 4.30 மணி அளவில் நான்காம் கால பூஜையுடன் வேத விற்பன்னர்கள் யாக சாலையிலிருந்து யாத்திரா தானம் கடத்துடன் புறப்பட்டன. தொடர்ந்து கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று முழங்கினர்.

    வேத விற்பன்னர்கள் பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர். அதன் பின்னர் கோவிலில் விசேஷ பூஜைகளும், நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாமன்ற உறுப்பினர் மண்டிசேகர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

    ×