சுத்தமல்லி கொடிமரத்து சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

சுத்தமல்லி கொடிமரத்து சுடலைமாடசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி 2-ம் யாகசால பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி யாகம் நடைபெற்றபோது எடுத்த படம்.
கும்பாபிஷேக விழாவையொட்டி யாகம் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

நெல்லை:

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி கொடிமரத்து சுடலைமாடசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், பிரம்மாச்சர்ய பூஜை, தீப லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று சிறப்பு ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், கோ பூஜை, கன்னியாபூஜை, சுமங்கலி பூஜை, தன பூஜை, மாலையில் யாகசாலை பூஜை, சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 6.30 மணிக்கு 2-ம் யாகசால பூஜை, நாடிச்சந்தானம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. 9 மணிக்கு கொடிமரத்து சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மகேஷ்வர பூஜையும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com